சைவக் கடவுளான சிவன்-பார்வதி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் முருகன். முருகப் பெருமானின் பழமையான கோவில்களில் சென்னையிலுள்ள வடபழனி முருகன் கோவிலும் ஒன்றாகும். 17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
சுவாமி : வடபழனி ஆண்டவர்
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : திருக்குளம்
தலவிருட்சம் : அத்தி மரம்
தல வரலாறு :
இத்திருக்கோவில் 125 ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட ஒருவரின் வழிப்பாட்டிற்காக கீற்று கொட்டகையாய் அமைக்கப்பட்டது. இன்று உலகெங்கும் இந்ததிருத்தலம் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. அண்ணாசாமி தம்பிரான் எனும் முருகபக்தர், தான் வழிப்படுவதற்காகவே சிறிதளவு முதல் போட்டு சிறுக் குடிசையாய் வடபழனி முருகன் கோவிலைக் கட்டினார். அதில் முருகன் திருவுருவ ஓவியத்தை வைத்து வழிப்பட்டார்.
சில நாட்களில் அவர் அங்கே தியானம் செய்யும்போது ஏதோ ஒரு தெய்வீக சக்தி அவருள் புகுவது போல உணர்ந்து குறி கூற ஆரம்பித்துவிட்டார். அப்படி அவர் கூறும் அனைத்தும் உண்மையில் நடக்க, மக்களின் பல குறைகள் தீர ஆரம்பித்துவிட்டது. இவர் தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். சில நாட்களில் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
அதன் பின் வந்த அவரது பணியை தொடர்ந்த ரத்தினசாமியும் தெய்வீக அருள் பெற்று, அருள் வாக்கு சொல்லும் காலத்திலேயே இறந்தார். இவர்களை போலவே அவருக்கு பிறகு வந்த யாரும் நிலைக்காமல் இறந்து போனார்கள். முருகனுக்கு கோவில் கட்ட மக்களிடமிருந்து நிதி குவிய ஆரம்பித்துவிட்டது.
கிருபானந்த வாரியார் :
முருக பக்தர் கிருபானந்த வாரியாரால் இத்திருக்கோவில் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவிலின் மூலவர் திருவுருவம் எல்லாவகையிலும் பழனியாண்டவரை ஒத்திருக்கும். இத்திருக்கோவிலில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகர் சன்னிதி, அன்னை பார்வதி, வரசித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி என பல தனிச் சன்னிதிகள் உண்டு.
தலச் சிறப்பு :
இத்தலத்தில் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு. சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் அங்காரகன் சுவாமிக்கு தனி சன்னிதி இருப்பதே கூடுதல் சிறப்பு ஆகும். அங்காரகன் முருக பெருமானுக்கு மிகவும் பிடித்தமானவர். இங்கு முருகனுக்கு தங்க தேர் உள்ளது.
பூஜைகள் :
அதிகாலை 5 மணிக்கு நடைத்திறக்கப்படும். இக்கோவிலில் முறைப்படி ஆறு காலப் பூஜைகளும் நடைப்பெறுகிறது. இங்கே கந்த சஷ்டி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவதுடன் பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
திருவிழா :
வைகாசி விசாகம் 11 நாள் வீதி உலா, கிருத்திகை, சித்ர பௌர்ணமி, சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, ஆனி, ஆடி ஆவணி, சுவாமி வீதி உலா, ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் மேலும் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் மற்றும் தெப்பத்திருவிழா 6 நாட்கள் நடைபெறும்.
நடைதிறப்பு :
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக