Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 5 பிப்ரவரி, 2020

சூரியன் பார்க்காத கிணறு... தியாகதுருகம் மலைக்கோட்டை...!!

 Image result for தியாகதுருகம் மலைக்கோட்டை...!!"
தியாகதுருகம் மலைக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சுமார் 65கி.மீ. மேற்கே தியாகதுருகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து கிழக்கே சுமார் 13கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் 400 அடி உயரத்தில் இந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது.

சிறப்புகள் :

 குன்றின்மேல் அமைந்துள்ள இந்த தியாகதுருகம் மலைக்கோட்டையில் ஏறி நின்று பார்த்தால் ஊரின் அழகு தெரியும்படி 400 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

 கோட்டையின் மேற்குப்புறத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே அருகர் குகைக்கோவில் உள்ளது.

 மலைக்கோட்டையில் சூரியன் பார்க்காத வகையில் கிணறு ஒன்றுள்ளது.

 இந்தக் கோட்டையில் பல இடங்களில் பதுங்கு குழிகளும், தாமரைகுளமும் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.
இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், குதிரை மற்றும் யானை போன்ற விலங்குகளின் கொட்டில்கள் இன்றும் மறையாமல் உள்ளது.

 அக்காலத்தில் போரின் போது எதிரிகளை தாக்க பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் இன்னும் நினைவுச் சின்னங்களாக இங்கு காணப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள் :

 சூரியன் பார்க்காத கிணறு...

 தாமரைகுளம்...

 பழமையான தானியக்கிடங்குகள்...

 மலைக்குன்றுகள்...

 அருகர் குகைக்கோவில்...

 பதுங்கு குழிகள்...

 பழங்காலத்து போர் நினைவுச் சின்னங்கள்...

இதர சுற்றுலாத் தலங்கள் :

 கல்வராயன் மலை...

 செஞ்சி கோட்டை...

 ஆரோவில்...

 சேந்தமங்கலம் கோட்டை...

 திருவக்கரை தேசிய கல் மர பூங்கா...

 மயிலம் முருகன் கோவில்...

மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில்...

எப்படி செல்வது?

தியாகதுருகம் மலைக்கோட்டை செல்ல கள்ளக்குறிச்சியில் இருந்தும், விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக