Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 மார்ச், 2020

மகர ராசி சார்வரி வருடம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்- பாகம் 03


Image result for சார்வரி வருடம்

ற்றவர்களின் மனமறிந்து செயல்பட்டு தனது காரியத்தை வெற்றியாக்கி கொள்ளும் மகர ராசி அன்பர்களே !!

சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மனதில் எண்ணிய செயல்களை திட்டமிட்டு செயல்படுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். குடும்ப பொருளாதாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சகோதர உறவுகளுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகளில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். தம்பதியினர் இன்ப சுற்றுலா சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியம் தொடர்பான ஆராய்ச்சிகளில் மனம் ஈடுபடும். மனதிற்கு பிடித்த பொன் நகைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு :

நண்பர்களுடன் இணைந்து மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவதற்கான சூழல்கள் உண்டாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் அவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் கவனக்குறைவினால் காலதாமதங்கள் நேரிடலாம்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்களிடம் பாராட்டுக்களையும், நன்மதிப்பையும் பெற்று மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செய்வது நன்மையளிக்கும். உயரதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். பணி நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகத்தால் சில குழப்பங்களும், பயணங்களும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகலாம்.

வியாபாரிகளுக்கு :

தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த சூழ்நிலைகள் மாறி அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் புதிய ஒப்பந்தங்களும், புதுவிதமான அனுபவங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். இணையம் சார்ந்த பணி தொடர்பான முதலீடுகளில் சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது சுபிட்சத்தை ஏற்படுத்தும்.

அரசியல்வாதிகளுக்கு :

கட்சி சார்ந்த உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கட்சித் தொண்டர்களின் ஆதரவு புதுவிதமான நம்பிக்கையை உருவாக்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். கட்சி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

விவாசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு மனையில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பூர்வீக மனைகள் மூலம் தொழில் சார்ந்த உதவிகளும், பொருட்சேர்க்கையும் ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்காலம் சார்ந்த சில திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்டுவதற்கு உகந்த காலக்கட்டமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சோர்வுகளை தவிர்த்து புத்துணர்ச்சியுடன் செயல்பட்டால் எண்ணிய இலக்கை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்பங்களை பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பரிகாரம் :

திங்கட்கிழமைதோறும் வெள்ளை மலர்களால் அம்பிகையை வழிபட்டு வர மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக