>>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • >>
  • டிஸ்னி இன்ஜினியர் அனைத்தையும் இழந்தார்—ஒரு AI புகைப்பட ஆப்பிற்காக!
  • >>
  • மர்மம் நிறைந்த இந்தியாவின் ரகசிய கோவில் – குல்தரா செவ்வேளூர் கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 9 மார்ச், 2020

    இராவணன் மாரீசனிடம் உதவி நாடல்!



     இராவணன் அரசவையை கலைத்துவிட்டு தன் அரண்மனைக்கு சென்றான். சீதையை நினைத்து எண்ணிக் கொண்டிருந்தான். தன் தம்பியான கரன் இறந்ததையே மறந்தான். சீதையை தன் இதயச் சிறையில் வைத்தான். சீதையின் மேல் உள்ள காதல் அதிகரித்துக் கொண்டே போனது. சீதை இப்படி தான் இருப்பாள் என கற்பனை செய்து கொண்டான். அவன் பார்க்கும் இடமெல்லாம், சீதை அவன் முன் தெரிந்தாள். இதைப்போலவே சூர்ப்பனகையும் இராமனை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டு இருந்தாள்.

     மறுநாள் காலை இராவணன் சூர்ப்பனகையை வரச் சொன்னான். தன் கற்பனையில் தோற்றமளித்து கொண்டிருக்கும் இவள்தானா சீதை என்பதை கேட்க சூர்ப்பனகையை வரச் சொன்னான். சூர்ப்பனகையிடம் இவள்தானா சீதை? எனக் கேட்டான். சூர்ப்பனகை இராமனை எண்ணி கொண்டு இருந்ததால், இவன் தான் நீல நிறமாய் காட்சியளிக்கும் இராமன் என்றாள். இராவணன், என் கற்பனையில் காணும் சீதை உனக்கு எப்படி இராமனாக தோன்ற முடியும் எனக் கேட்டான். அதற்கு சூர்ப்பனகை இராமன் மீது உள்ள பயத்தினால் எனக்கு தோன்றுகிறது என்றாள்.

     இராவணன் காலையில் எழுந்து, தான் செய்யும் காலை கடமைகளை கூட செய்யவில்லை. எப்படியாவது சீதையை கவர்ந்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தான். அதற்கு தாடகையின் மகன், மாயத்தில் வல்லவனான மாரீசனின் உதவியை நாட எண்ணினான். உடனே இராவணன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி, ஓர் ஆலமரத்தின் கீழ் தவம் செய்து கொண்டு இருக்கும் மாரீசனிடம் சென்றான். மாரீசன் இராவணனை கண்டு திடுக்கிட்டான். இந்த காலை நேரத்தில் இவன் வந்துள்ளான்? எதற்காக வந்திருப்பான்? என அச்சம் கொண்டான். இராவணனை பார்த்து, மருமகனே! வருக! எல்லோரும் நலமாக உள்ளார்களா? எனக் கேட்டான். இராவணன், மாரீசனைப் பார்த்து மாமா! எல்லோரும் நலமாக உள்ளோம். உன் மருமகளாகிய சூர்ப்பனகை தசரத குமாரர்கள் இராம, இலட்சுமணனால் காதும் மூக்கும் அறுக்கப்பட்டாள். கரன், தூஷணன், திரிசரஸ் மூவரையும் இராமன் வதைத்து கொன்று விட்டான். இது நம் குலத்துக்கே பெரும் அவமானம், அவர்களை நாம் அழிக்க வேண்டும்.

     மாமா! இராமனின் மனைவி சீதை மிகவும் அழகு உடையவள். அவளை நான் விரும்புகிறேன். நான் அவளை அடைய வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றான். அதற்காக தான் நான் உங்களை நாடி வந்துள்ளேன் என்றான். மாரீசன் இராவணனிடம், இராவணா! நீ எப்படிப்பட்ட செயலை செய்ய துணிந்துள்ளாய் என்று தெரியுமா? உன் செய்கையால் அசுர குலமே அழிந்துவிடும். நான் ஒரு அசுரனாக இருந்தாலும் உனக்கொரு நல்ல அறிவுரை கூறுகிறேன் கேள் என்றான். பாவங்களுக்கு எல்லாம் பெரிய பாவம் மற்றவர் மனைவியை விரும்புவது தான். உனக்கே பல மனைவிமார்கள் இருக்க நீ மற்றவர் மனைவியை விரும்பலாமா? அடுத்தவர் மனைவியை நினைத்து அழிந்தவர் பலர் உண்டு.

    இந்திரன் அகலிகையை விரும்பியதால் தன் பெருமையெல்லாம் இழந்து சாபத்திற்கு ஆளானான். இது போல அழிந்தவர்கள் எண்ணற்றவர். உனக்கு விருப்பமான மனைவியர் பலர் இருக்க நீ ஏன் சீதையை விரும்புகிறாய்? இதனால் உன் அரக்கர் குலமே அழிந்து போகும். இராவணா! நீ வகிக்கும் இந்தப் பதவியும், செல்வமும் உனக்கு சாதாரணமாக கிடைத்தது அல்ல. இரவும் பகலும் தவமிருந்து, உன் உடலை வருந்தி நீ பெற்றுள்ள இப்பதவியை பெண்ணாசை கொண்டு இழந்து விடாதே என அறிவுரை கூறினார்.

    தொடரும்.....

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக