தனக்கு பிடித்த விதத்தில் சுதந்திரமாக
இருக்கும் மேஷ ராசி அன்பர்களே..!!
சார்வரி
வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள்
திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில்
பொருட்சேர்க்கையும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறுதூர பயணங்களின் மூலம்
வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும். அழகுப் பொருட்கள் மற்றும்
வாசனை திரவியங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் உண்டாகும். மனதில் எண்ணிய காரியங்கள்
சிறிது அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள்
சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
பாகப்பிரிவினைகள் மூலம் பொருட்சேர்க்கையும், உறவுகளிடத்தில் சில மனக்கசப்புகளும்
நேரிடலாம். கனரக வாகனப் பயணங்களின்போது கவனத்துடன் இருக்கவும். பத்திரம் தொடர்பான
செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள்
கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். சக
தோழர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் மற்றும் சண்டைகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் தடைகளுக்குபின் எண்ணிய எண்ணம் நிறைவேறும்.
ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் சுபிட்சம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான
செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றமும், இடமாற்றமும் நேரிடலாம். மனதில்
தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வது நன்மையை
ஏற்படுத்தும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில்
இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய உத்தியோகம் சார்ந்த
முயற்சிகளில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றி மறையும். முயற்சிகள் அதிகமாக இருப்பினும்
லாபம் காலம் கடந்து கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம்
செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் சற்று தாமதமாகும்.
வாடிக்கையாளர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதுவிதமான
யுக்திகளை கையாளும்போது சாதகம், பாதகம் அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். புதிய
பொருட்களை கொள்முதல் செய்யும்போது பொருட்களின் தரத்தை அறிந்து வாங்கவும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள்
எந்தவொரு வேலையையும் திட்டமிட்டு செய்வதன் மூலம் நன்மதிப்பையும், லாபத்தையும் பெற
இயலும். எதிர்காலம் சார்ந்த முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகள்
உண்டாகும். கட்சி சார்ந்த உயரதிகாரிகளிடம் உங்கள் மீதான செல்வாக்கு அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம்
சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு விளைச்சலுக்கேற்ற பொருள் வரவு குறைவாகவே
கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும்.
விதைகள் மற்றும் உரங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்பட வேண்டும். பழங்கள் மற்றும்
பூக்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில்
இருப்பவர்களுக்கு இடைத்தரகர்களின் ஒத்துழைப்பு மூலம் முன்னேற்றம் உண்டாகும். இலக்கியத்துறையில்
இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத புதிய
ஒப்பந்தங்களின் மூலம் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பரிகாரம் :
பௌர்ணமிதோறும்
அம்பிகை வழிபாடும், கிரிவலம் சென்று வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும்
உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல்கள் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக