Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 மார்ச், 2020

டியோ, ஆக்டிவா 125, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்த ஹோண்டா...!



ழுது ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கொண்ட ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமாகவும், டீலர்கள் வாயிலாகவும் ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட ஸ்கூட்டர் மாடல்களின் பின்புற சஸ்பென்ஷனுக்குரிய உதிரிபாகத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறியும் பொருட்டு ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ரீகால் அழைப்பு விடுத்துள்ளது.

வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 வாகன விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது. இதை முன்னிட்டு, கடந்தாண்டு முதலே பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

இருசக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் கடந்த ஜனவரி மாதம் பிஎஸ்6 ஆக்டிவா 6ஜி மற்றும் டியோ ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
அதற்கு முன்னதாகவே, ஆக்டிவா 125 ஸ்கூட்டரை பிஎஸ்-6 தரத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது ஹோண்டா. தற்போது இந்த மூன்று வாகனங்களும் விற்பனையில் முதன்மையாக உள்ளன.

பிஎஸ் 6 எஞ்சின் கொண்ட டியோ, ஆக்டிவா 6ஜி மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகமானதில் இருந்து தற்போது வரை ஒரு லட்சம் யூனிட்டுகள் கடந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மேற்கண்ட ஸ்கூட்டர்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது ஹோண்டா. அதன்படி, பிப்ரவரி மாதம் 15ந் தேதி முதல் 24ந் தேதி உற்பத்தி செய்யப்பட்ட பிஎஸ்-6 டியோ, ஆக்டிவா 6ஜி, ஆக்டிவா 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஸ்கூட்டர்களுக்குரிய பின்புற சஸ்பென்ஷனில் உள்ள பிரதான உதிர்பாகத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக மேற்கண்ட மூன்று ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து ஹோண்டா பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளது.

குறிப்பிட்ட காலவரைக்குள் மேற்கண்ட ஸ்கூட்டர்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் மூலமாக இ-மெயில், போன் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்ப ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட டியோ, ஆக்டிவா 6ஜி மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் பழுது இருப்பது தெரிய வந்தால் அது உடனே சரிசெய்து தரப்படும் என ஹோண்டா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஒருவேளை குறிப்பிட்ட தேதிகள் மேற்கண்ட ஸ்கூட்டர்களை வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் ரீகால் அழைப்பு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஹோண்டா நிறுவனம் சிறப்பு வசதியை செய்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்கூட்டரின்  நம்பரை ஹோண்டாவின் இணையதளப் பக்கத்தில் அளிக்க வேண்டும். இதன்மூலம் தங்களுடைய ஸ்கூட்டருக்கு ரீகால் அழைப்பு பொருந்துமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், சேவைக்கான முன்பதிவு செய்வதன் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்கூட்டரை ரீகால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம். இதன்மூலம் வாகனத்தில் பழுது இருந்தால் அது நீக்கப்பட்டு, புதிய பாகம் மாற்றியமைத்து தரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக