சனி, 21 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 154


அதிகாரமும் துன்பமும் :

சுரூசியின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க முதல் மனைவியான சநீதிக்கு அநீதிகள் நிகழத்தொடங்கின. அதாவது அரண்மனையில் வாழ்ந்து கொண்டிருந்த சநீதி அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டு அரண்மனையின் பின்புறத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையானது சநீதிக்கு மட்டுமல்லாமல் அவள் வயிற்றில் சுமந்து ஈன்றெடுத்த குழந்தையான துருவனுக்கும் ஏற்பட்டது.

தான் இவ்விதம் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை தனது கணவரிடம் எடுத்துரைக்கவும் அல்லது அரசாட்சி புரிந்து வரும் அமைச்சர் முதலான பெரியோர்களிடம் சென்று முறையிடவோ சநீதிக்கு மனம் இடம் அளிக்கவில்லை. ஏனெனில் அவ்விதம் யாம் நடந்து கொண்டால் தனது கணவருக்கு மற்றவர்கள் மற்றும் பிரஜைகள் மூலம் அவமானங்கள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகி அவர் துன்பப்படுவார் என்பதை எண்ணி, தனக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை பொறுமையாகவும், நிதானத்துடனும் தனது கணவருடன் இருந்து வந்த நாட்களை எண்ணிக்கொண்டு மனதை சமாதானப்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தார்.

சிவனின் ஐந்து முகங்கள் நமது ஒவ்வொருவரின் உடலில் இருக்கும் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கக்கூடியவைகளான ப்ராணன், அபானன், உதானன், வியானன், சமானன் எனும் ஐந்து வாயுக்கள் தெளிவுப்படுத்துகின்றன.

சிவபெருமானுக்கு ஐந்து முகம் மட்டும் அல்லாமல் எவருக்கும் அறியாத ஆறாவதாக ஒரு முகம் இருக்கின்றது. அந்த ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது.

சத்யோசாதம் முகம் அல்லது தோற்றம் :

 சத்யோசாதம் என்பது ஐந்து முகங்களில் சிவபெருமானின் படைத்தல் பணிபுரியும் முகமாகக் கருதப்படுகின்றது.
இந்த வகை துன்பம் பாலகனான துருவனை சென்றடையா வண்ணம் அவனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். துருவன் அரண்மனையின் உட்புறத்திலேயோ அல்லது முன்பக்கமோ செல்லாத வண்ணம் அவனை கவனித்துக் கொண்டும் வளர்த்து வந்து கொண்டிருந்தார்.

அரண்மனையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சூழலை அறிந்து கொள்வதற்கான வயதோ பக்குவமில்லாத துருவன் தன் தாயின் அறிவுரை அடிப்படையிலேயே வளர்ந்து வந்து கொண்டிருந்தான். துருவன் தனது தாய் தன்னிடம் உரைத்த இடத்தில் மட்டுமே தனது மகிழ்ச்சியையும், விளையாட்டையும் கண்டு வந்து கொண்டிருந்தான்.

இறைவன் ஒருநாள் தனது துன்பத்தைப் போக்கி அனைவருடனும் ஒன்றாக வாழ்வோம் என தனது மனதில் நம்பிக்கை கொண்டு தன்னுடைய மகனுடைய வாழ்க்கையையும், தனது வாழ்க்கையையும் அரண்மனைக்கு வெளியிலேயே கழித்துக் கொண்டிருந்தார் சநீதி.

விதியின் விளையாட்டு :

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த துருவன் விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக ஒருநாள் அரண்மனையின் நந்தவனம் அருகில் சென்றான். அந்த நந்தவனத்தில் அவன் கண்ட காட்சிகள் அந்த இடத்தில் அவனுக்கு ஒரு புதுவிதமான எண்ணத்தை உருவாக்கத் தொடங்கின.

சிவத்தோற்றம் :

சுவாத லோகித கற்பத்தில் பிரம்ம தேவன் படைத்தல் பணியை எண்ணி சிவபெருமானை வணங்கி தியானத்தில் ஆழ்ந்திருந்தப்போது சிவபெருமான் அவ்விடம் தோன்றினார். அவ்விடம் தோன்றிய சிவன் மிகவும் அழகிய இளம் பாலகனாக காட்சியளித்தார்.

ஐந்து முகங்களில் சிவபெருமானின் படைத்தல் முகமான இந்த சத்யோசாத முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் என ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார்.
அதாவது தனது தந்தையின் மடியில் தனது தம்பியான உத்தமன் விளையாடிக் கொண்டிருப்பதையும் அவருக்கு அருகில் இளம் மனைவியான சுரூசியும் மகிழ்வுடன் இருந்து கொண்டிருப்பதையும் பார்த்ததும் அவன் மனதில் தன்னையும் அறியாமல் தானும் தனது தந்தையுடன் இவ்விதம் விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. அவர்களது மகிழ்ச்சியில் தானும் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலால் தன் தாய் கூறிய அறிவுரைகளையும் தாண்டி அவருடைய வார்த்தைகளையும் மறந்து அவர்கள் அருகிலேயே செல்லத் தொடங்கினான் துருவன்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்