Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 157


நான் தவம் செய்து அவர்கள் மடியில் விளையாட அடுத்த பிறவிக்கு நான் முயற்சி செய்வதை காட்டிலும் நாம் வணங்கும் சிவனை எண்ணி நான் தவம் புரிந்து, இந்த பிறவியில் நமக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை விலக்கப் போகின்றேன். ஆகவே, எனக்கு தாங்கள் தவம் செய்யும் முறையை உரையுங்கள். நான் வனத்திற்கு போய் தவம் செய்கிறேன் என்று தனது தாயிடம் கூறினான்.

துருவனின் முடிவைக் கேட்டதும் சநீதிக்கு ஒருவிதமான பயம் உண்டாயிற்று. துருவா...! நீ சிறு பாலகன் உன்னால் வனத்தில் உள்ள துஷ்ட மிருகங்கள் நடமாடும் இடத்தில் தனியாக சென்று தவம் செய்ய இயலாது. மேலும், வனத்திலுள்ள மிருகங்களால் உனக்கு ஏதேனும் ஆபத்துக்கள் கூட ஏற்பட நேரிடும். ஆகவே இம்மாதிரியான எண்ணங்களை விடுத்து அமைதி கொள்வாயாக. நீ பெரியவன் ஆன பிறகு வேண்டுமாயின் வனத்திற்குச் சென்று தவம் புரியலாம். ஆனால், இச்சிறு வயதில் வேண்டாம் என்று தனது மகனிற்கு ஆறுதல் கூறினாள்.

ஈசானம் முகம் அல்லது தோற்றம் :

ஈசானம் என்பது ஐந்து முகங்களில் சிவபெருமானின் அருளும் பணிபுரியும் ஒரு முகமாகக் கருதப்படுகிறது.

சிவத்தோற்றம் :

விஸ்வரூப கற்பத்தில் மலரயன் என்பவர் சிவபெருமானை எண்ணி தவமிருந்த போது அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பிறைச் சந்திரனை சடாமுடியில் கொண்டு நெற்றிக் கண் மற்றும் கோரைப்பற்களுடன் காட்சியளித்தார். அவருடன் இரு மாதர்களும் தோன்றினர். வாணி மற்றும் தேவர்களின் தாயார் ஆகியோர் இருபுறமும் இருந்தனர். இத்தோற்றம் ஈசானமாகும்.

சிவபெருமான் ஈசான முகத்திலிருந்து புரோக்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களை தோற்றுவித்தார் எனவும், அறுபத்தாறு முனிவர்களும் ஆகம இரகசியப் பொருளை இம்முகத்தின் மூலம் அறிந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
தனது தாய் எவ்வளவு முயற்சித்தும் தனது எண்ணங்களில் இருந்து பின்வாங்காமல் இனி என்னால் இவ்விடத்தில் இருக்க இயலாது என்றும், நான் வணங்கும் சிவபெருமானை எண்ணி கானகத்தில் தவம் செய்தால் எனக்கு எவ்விதமான ஆபத்துகளும், விலங்குகளால் துன்பமும் நேரிடாது என்று மிகவும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினான் துருவன்.

எதையும் அறியாத சிறுவயதில் சிற்றன்னையின் சொற்களின் விளைவாக அவன் மனதில் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிகவும் ஆழமாக பதிந்து விட்டதை நன்கு உணர்ந்த சநீதி இனி அவனை எவராலும் தடுக்க இயலாது என்பதை உணர்ந்தார்.

மகனே..!! இதுதான் உன் முடிவு எனில் அதை எவராலும் மாற்ற இயலாது. இனி அந்த பரம்பொருளான எம்பெருமான் நிகழ்வதை கண்டு கொண்டே இருக்கையில் நாம் என்ன செய்ய இயலும். இதுதான் நமது விதியாக இருக்கும் பட்சத்தில் இதை எவராலும் மாற்ற இயலாது என்று கூறி நீ சிவபெருமானை எண்ணியவாறு அவரது திருநாமங்களை விடாது ஜபித்து வர உலகையே தன்னுள் கொண்டுள்ள அப்பெரும் ஜோதி உனக்கு அருள்புரிவார் என்று கூறினாள்.

பின்பு, தான் வணங்கும் சிவபெருமானின் அருகிலிருந்த திருநீரையும், அவருக்கு பூஜித்த பூக்களையும் தனது மகனிடம் கொடுத்து நீ மனதில் நினைத்த செயலை விரைந்து முடித்து வெற்றியுடன் வருவாயாக என்று ஆசீர்வதித்து தனது மகனை தவம் புரிய கானகம் நோக்கி செல்ல விடை கொடுத்து அனுப்பினாள்.

கானகம் வருதல் :

துருவனும் தனது தாயிடம் ஆசிப்பெற்று தன்னந்தனியாக நாட்டை விட்டு வெளியேறி கானகத்தை வந்தடைந்தான். கானகத்தின் நடுவில் ஒரு அழகிய ஆசிரமும் ஒன்றையும் அதில் சில முனிவர்கள் தவம் புரிந்து கொண்டு இருந்ததையும் கண்டார். அதில் கௌசிக முனிவரை கண்டு அவரை வணங்கினார்.

அனைத்தும் உணர்ந்தவர்கள் அல்லவா முனிவர்கள். பாலகனை கண்ட நொடியே யார் இவன் என்பதை விரைவில் அறிந்து கொண்டார் கௌசிக முனிவர். பின்பு, நீ உத்தானபாதனின் மைந்தன் அல்லவா? ஏன் சிறுவயதில் தன்னந்தனியாக மரவுரி கோலம் பூண்டு இங்கு வந்துள்ளாய் என்று கேட்டார்.

முனிவரின் கேள்விக்கு அவரை வணங்கியவாறு முனிவரே!! நான் என் சிற்றன்னையால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளேன், மேலும், என் தந்தையால் நான் உதாசீனப்படுத்தப்பட்டு உள்ளேன் என்றும், நான் இவர்களை விட உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றும், அப்பதவியை அளிக்கவல்ல இவ்வுலக நாயகனான சிவனை நோக்கி தவம் புரிய வந்திருக்கின்றேன் என்று கூறி அதற்கான வழிமுறைகளை தாங்கள் எனக்கு அருள வேண்டுகின்றேன் என்று வேண்டி நின்றான் துருவன்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக