வரம் அருளுதல் :
பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்கிய திருமால் தேவாதி தேவர்களும் என்றும் போற்றி வணங்கும் வண்ணம் சகல புவனங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் நடுநாயகனாக விளங்கக்கூடிய உயர்ந்த பதவியை யாம் உனக்கு அளிக்கின்றோம் என்றும், சப்த ரிஷிகள் அனைவரும் உம்மை வலம் வருவார்கள் என்றும் கூறி அருள் புரிந்தார்.
மேலும் நீ... உன் தந்தையிடம் சென்று அவர் அளிக்கும் நாட்டினை செவ்வனே ஆட்சி புரிந்து பிறவிக்கடனை முடித்துக்கொண்டு நீ அப்பதவியை அடைவாய் என்று கூறி துருவனுக்கு அருளாசி வழங்கி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார்.
திருமால் அளித்த வரத்தில் மிகவும் மனம் மகிழ்ந்த துருவன் தனது தாயிடம் இச்செய்தியை உரைக்க... தவம் புரிந்து கொண்டிருந்த அவ்விடம் விட்டு விரைந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் தனது தாய் இருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
இறைவனின் அருளினால் துருவனின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் யாவும் மறையத் துவங்கின.
ராஜ்ஜிய மாற்றம் :
உத்தானபாதனின் ராஜ்ஜியத்தில் பல மாற்றங்கள் நிகழத்தொடங்கின. உத்தானபாதன் தனது தவறை உணர்ந்து ராஜ்ஜிய பொறுப்புகளை ஏற்று ஆரம்பிக்க துவங்கியதும் இளைய மனைவியின் தவறுகளையும் சுட்டிக்காட்டி அவளுடைய தவறையும் உணர செய்து, முதல் மனைவிக்கு உண்டான மரியாதையையும் வழங்கினார்.
வனத்தில் இருந்து வந்த துருவனுக்கு நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க பிறவிக்கடனை நன்முறையில் கடந்து இறைவன் அருளிய தேவலோக பதவியை அடைந்தார். துருவனின் தாயும் ஒரு நட்சத்திரமாகி அவனின் அருகில் பிரகாசிக்க தொடங்கினார்.
இறைவன் அருளிய வரத்தினால் சப்த ரிஷிகளும் துருவனையே முதன்மையாக சுற்றி வலம் வர தொடங்கினர்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக