Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 170

இந்திரனும், மற்ற தேவர்களும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடச் சென்றனர். அவ்விதம் நீராடியும் இந்திரதேவருக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகவில்லை. மேலும் காசி, காஞ்சி போன்ற சிவ தலங்களுக்கு சென்று சிவபெருமானையும் வழிபட்டு சென்றனர். எனினும் தோஷத்தின் விளைவானது குறையாமல் அவ்விதமே தொடர்ந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக தேவர்கள் அனைவரின் பொலிவும் குறைந்து கொண்டே வந்தது.

கடைசியாக இந்திரன் முதலிய தேவர்கள் தென்திசையில் உள்ள கடம்ப வனத்தின் எல்லைப் பகுதிக்கு வந்த பின்பு இந்திரதேவனிடம் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமானது அவரை விட்டு விலகிச் சென்றது. தோஷத்தின் விளைவாக ஏற்பட்டிருந்த பொலிவு குறைவானது நீங்கி, மறுமலர்ச்சி பெற்ற இந்திரதேவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்திரதேவன் தேவலோகத்தில் உள்ள தேவ குருவிடம் சென்று அவரிடம் நிகழ்ந்ததை பற்றி எடுத்துரைத்து அவரிடம் ஆசிப்பெற்றார்.

குருதேவரின் ஆணை :

தேவ குருவான பிரகஸ்பதியிடம் ஆசிப்பெற்ற இந்திரதேவனிடம் பிரகஸ்பதி, தேவேந்திரா...!! உங்களின் சாபத்தை நீக்கி விமோசனம் அளித்த அந்த கடம்ப வனத்தில்தான் உலகிலேயே மிகவும் உயர்ந்த புண்ணிய ஸ்தலமும், புண்ணிய தீர்த்தமும் இருக்கின்றது. அந்த புண்ணிய தீர்த்தங்களை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் அங்கு சென்று அதைப் பற்றி அறிந்துகொண்டு வருவீர்களாக என்று கூறினார். குருவின் கட்டளைக்கு இணங்கி இந்திரதேவன் கடம்ப வனத்திற்கு சென்று அங்குள்ள புண்ணிய தீர்த்தங்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

கடம்ப வனத்திற்குச் செல்லுதல் :

குரு தேவரின் ஆணைக்கு இணங்கி கடம்ப வனத்தில் உள்ள சிறப்புகளை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு கடம்ப வனத்திற்குள் இந்திரதேவன் நுழைந்தார்.

இந்திரன் வனத்தில் நுழைந்தவுடனேயே அதுவரை உணராத புதுவகையான மணத்தினை உணர்ந்தார். அந்த மணத்தினால் அவருடைய மனமானது மிகவும் மகிழ்ச்சியான நிலைக்குச் சென்றது. அங்குள்ள பறவைகள் யாவும் ஓம் ஓம் எனும் மந்திரத்தை கூறுவது போல் அவரின் செவிகளுக்கு எட்டத் தொடங்கியது.

ஆனந்தம் அடைதல் :

கடம்ப வனத்திற்குள் நுழைந்ததில் இருந்து தேவலோகத்தில் கிடைத்த மகிழ்ச்சியை விட மிகவும் மனம் மகிழ்ந்தார் இந்திரன். இந்த சிறு பகுதியிலேயே இவ்வளவு பேரானந்தம் எனில் இந்த வனம் முழுவதும் எவ்வளவு ஆனந்தம் இருக்கும் என்று எண்ணி அந்த வனத்தில் உள்ள பகுதிகளை பற்றி அறிந்துகொள்ள தூதுவர்களை அனுப்பி வைத்தார்.

தூதுவர்கள் கூறுதல் :

தூதுவர்களும் வனத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு அவர்கள் கண்டவற்றை தேவேந்திரனிடம் எடுத்துரைக்கத் துவங்கினார்கள். தேவேந்திரா...!! இந்த வனம் முழுவதும் இறை மணம் நிறைந்துள்ளது என்றும், எங்கும் காண கிடைக்காத அரிய இறைக்காட்சியை கண்டதாகவும் கூறினார்கள். அதாவது வனத்தின் மையத்தில் ஒரு கடம்ப மரத்தின் நிழலில் எம்பெருமானான சிவபெருமான் லிங்க வடிவத்தில் வீற்று இருக்கிறார் என்றும், அந்த இடத்தில் இருந்து ஒப்பற்ற ஒளியானது வெளிப்படுகின்றது என்றும் கூறினார்கள்.

தூதுவர்கள் கூறியதைக் கேட்ட இந்திரன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். தனது தோஷத்தை போக்கி விமோசனம் அளித்த எம்பெருமானை வணங்கி ஆசி பெற வேண்டும் என்று உரைத்து தன்னை மறந்து சிவபெருமானின் ஸ்தோத்திரங்களை கூறிக்கொண்டு இருந்தார்.

தேவேந்திரனின் மனமகிழ்ச்சி :

தேவ தூதுவர்கள் கூறியவற்றை கேட்ட இந்திரதேவன் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த கடம்ப மரத்தின் நிழலில் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்டு மிகவும் ஆனந்தம் கொண்டார். எம்பெருமானை பூஜிப்பதற்காக தேவலோகத்தில் இருக்கக்கூடிய அழகிய புஷ்பங்களை பூலோகத்திற்கு எடுத்துவர தேவ தூதுவர்களை அனுப்பி வைத்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக