நித்திரையில் இருந்து விழித்தெழுந்த குலசேகர பாண்டியனுக்கு மேற்கொண்டு நித்திரையில் மனமில்லாமல் கதிரவனின் உதயத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.
சூரிய உதயம் துவங்கியது, பொழுதும் விடிந்தது. முன்தின இரவில் தான் கண்ட கனவினால் மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியுடனும், பசுமையான நினைவுகளுடனும் இருந்து வந்தார்.
பின்பு தனது நித்திய கருமங்கள் யாவற்றையும் முடித்துக்கொண்டு ஞானத்தில் சிறந்த தவசீலர்களை காண அமைச்சர்களுடன் சென்று கொண்டிருந்தார்.
முனிவர்களிடம் கலந்துரையாடல் :
தவத்தில் சிறந்த ஞானிகளை கண்டதும் அவர்களிடம் பணிந்து வணங்கி, பின்பு முந்தின இரவில் இறைவன் தன் கனவில் தோன்றியதையும், அவர் எடுத்துரைத்த செய்திகளைப் பற்றியும், அதற்கு முன்பே பகல் பொழுதில் வணிகரான தனஞ்செயன் கூறியதையும் தெளிவாக எடுத்துரைத்தார். முனிவர்கள் மன்னன் கூறியதைக் கேட்டதும் தனது திவ்ய பார்வையால் நிகழ்ந்தவை யாதென்று அறிந்து கொண்டனர். பின்பு மன்னரிடம் மன்னா... மேற்கு திசையை நோக்கி பயணம் செய்வாயாக! என்று கூறினார்.
கோவிலைக் காணுதல் :
பின்பு தனது தூதர்களை அனுப்பி தனஞ்செயனை அழைத்துவர ஆணையைப் பிறப்பித்தார். தூதர்களும் தனஞ்செயனுக்கு மன்னர் உரைத்த தகவல்களை எடுத்துரைத்தனர். தனஞ்செயன் மிகவும் மகிழ்ச்சியுடன் மன்னரின் அழைப்பிற்கு இணங்கி வருகை தந்து மன்னரின் பரிவாரங்களுடன் முனிவர்கள் சொன்ன மேற்கு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கினர். தனஞ்செயன் கோவில் இருக்கும் இடத்தினை வழிகாட்ட அவரைப் பின் தொடர்ந்த வீரர்களும், மன்னரும் கோவில் இருக்கும் இடத்தை அடைய துவங்கினர்.
தனஞ்செயன், எம்பெருமான் வீற்றிருந்த இடத்தை காட்டியதும் அவ்விடத்திலிருந்த இயற்கை காட்சிகளையும், குளத்தையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் மன்னர். தனஞ்செயனோ மன்னரிடம் இது பொற்றாமரைக்குளம் என்றும், இதில் நீராடி பின் எம்பெருமானை தேவர்கள் அனைவரும் வணங்கினர் என்றும் எடுத்துரைத்தார்.
தனஞ்செயன் கூறியதைக் கேட்ட மன்னரும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, தெய்வீகத்தன்மை பொருந்திய அழகிய வேலைப்பாடுகளுடன் நிரம்பிய விமானத்தின் அடியில் இருந்த எம்பெருமானை கண்ணாரக் கண்டு, மெய்மறந்து அவ்விடத்தில் நின்று கொண்டிருந்தார். பின்பு இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி இறைவனின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
சிவபெருமானை மிகுந்த பக்தியுடன் வணங்கிய மன்னர், விண்ணுலகில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மண்ணுலகில் உள்ளவர்களையும் காக்க எங்கள் அன்புக்கு இணங்கி இந்தக் கானகத்தில் வந்து எழுந்துள்ளீர்களே? உங்கள் கருணையே கருணை இறைவா... என்று மகிழ்ச்சிக் கடலில் பொங்கி, சொக்கநாத கடவுளை பலவாறு துதித்து வணங்கி வலம் வந்து கொண்டிருந்தார். சிவபெருமானை வணங்கிய மன்னர் அங்கேயே பாசறை அமைத்து தன் அமைச்சர்களுடன் ஓரிடத்தில் தங்கியிருந்தார்.
வனத்தை திருத்தி அமைத்தல் :
சொக்கநாதர் எழுந்தருளியுள்ள அந்த வனத்தில் ஒரு மாபெரும் அழகிய நகரத்தை உருவாக்க வேண்டும் என்று மன்னர் விரும்பினார். வனத்தினை திருத்தி அமைத்து ஒரு திருநகரத்தை உருவாக்க தனது மந்திரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். அரசனுடைய ஆணையை ஏற்ற மந்திரிகள் நகரம் அமைப்பதற்காக பல பணியாட்களை அழைத்து வர சென்றனர்.
பெரிய பரப்பளவு கொண்ட இந்த வனத்தை திருத்தி, ஒரு அழகிய நகரத்தை உருவாக்கும் திருப்பணிகளில் பல ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுவதற்காக அங்கு அழைத்து வரப்பட்டனர். நகரத்தின் மத்தியிலேயே எம்பெருமான் கோவிலானது இருக்கும்படி அமைக்கும் விதமாக திட்டமானது செய்யப்பட்டது.
இடம் தேர்வு செய்தல் :
திருத்தலம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, திருநகரம் அமைப்பதற்கு ஏற்றவாறு பெரிய நிலப்பரப்பானது சமதள இடமாக பல்லாயிரக்கணக்கான கைகளால் இணைந்து உருவாகியது.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
சிவபுராணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக