>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 31 மார்ச், 2020

    தமிழக முதல்வர் நிதிக்கு சக்தி மசாலா 5 கோடி நிதியுதவி..!

    கரோனா வைரஸ் பாதிப்புக்காக, தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

    தமிழகத்தில்  கொரோனா வைரஸால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..1 உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முதல்வரின் அழைப்பை அடுத்து  பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது த்மிழகத்தில் முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் சக்தி மசாலா நிறுவனம் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் அழைப்பை ஏற்று 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

    இது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிய நிறுவனம்: தங்களின் தலைமையில் அமைந்த அரசு தமிழகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க  எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பாக முதற்கண் எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு எங்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் அனுப்பியு உள்ளோம் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் நாங்களும் பங்கேற்க தாங்கள் வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி என்று சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக