Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 மார்ச், 2020

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ வெடித்தது! காரணத்தை கேட்டு அதிர்ந்து போன உரிமையாளர்!


ரெட்மி நோட் 7 ப்ரோ யூனிட் வெடித்தது

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்டபோன் அண்மையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்தது. டிசம்பர் 2019ல் வாங்கிய குர்கோன் பகுதியைச் சேர்த்த இளைஞர் வாங்கிய புத்தம் புதிய ரெட்மி நோட் 7 ப்ரோ தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது. இதற்கான கரணம் என்ன என்று சேவை மையத்தை அணுகிய அந்த இளைஞரை குற்றம்சாட்டியுள்ளனர், இவருக்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா?
ரெட்மி நோட் 7 ப்ரோ யூனிட் வெடித்தது
குர்கோன் பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமாரின் ரெட்மி நோட் 7 ப்ரோ யூனிட் தனது பாக்கெட்டில் இருந்த பொழுது இரண்டு தினங்களுக்கு முன்பு சூடேறியுள்ளது. சில நொடிகளில் சூடேறிய ஸ்மார்ட்போன் புகைக்கத் துவங்கியதும் அருகிலிருந்த அவரின் பை மீதி தூக்கி எறிந்திருக்கிறார். பையில் விழுந்த சில நொடிகளில் ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்துத் தீப்பிடித்துவிட்டது. இதனால் அவரின் பையில் பெரிய அளவு ஓட்டை ஒன்றும் விழுந்துள்ளது.
5 வினாடியில் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்
தனது ஸ்மார்ட்போன் தன் கண்முன் வெடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் விக்னேஷ் குமார். ரெட்மி நோட் 7 ப்ரோவின் பேட்டரி வெடித்து அவரின் பை முழுமையாக எரித்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கையில் இருந்து எறியப்பட்ட 5 வினாடியில் ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எறிந்துள்ளது.
உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்
சூடேறியதைக் கவனிக்காமலிருந்திருந்தால் அவர் பாக்கெட்டில் ஸ்மார்ட்போன் வெடித்து அவர் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். பயத்துடன் எதிர்ந்த தீயை அணைக்கவும் பெரிதும் பாடுபட்டார் என்று விக்னேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். அவரின் வீட்டின் அரை முழுதும் கரும்புகை சூழ்ந்தது என்று கூறியுள்ளார்.
இளைஞர் மீது குற்றம்சாட்டிய சேவைமையம்
இதன் தொடர்பாக உள்ளூரில் உள்ள சியோமி சேவை மையத்தை அணுகியுள்ளார். ஆனால், சேவை மைய அதிகாரிகள் அலட்சியமாகவும் மோசமாகவும் பதில் அளித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். முன்பெல்லாம் ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்தால் ஒரிஜினல் சார்ஜ்ர் பயன்படுத்தவில்லை என்று கூறி காரணத்தைக் கூறுவார்கள். ஆனால், விக்னேஷ் குமாரிற்குச் சொல்லப்பட்ட காரணம் பட்டியலிலேயே இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.
பட்டியலிலேயே இல்லாத Power On Fault
விக்னேஷ் குமார் மீது சொல்லப்பட்ட குற்றத்தை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை, அதுவும் Power On Fault என்ற புது விதமான, சியோமி பட்டியலிலேயே இல்லாத ஒரு காரணத்தைக் கூறி விக்னேஷ் குமாரிடம் சேவை மைய அதிகாரிகள் புதிய மாற்று போன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். விக்னேஷ் குமார் கடுப்பில் சண்டை போட்டபின் 50% சலுகையுடன் புதிய போனை வழங்குகிறோம் என்று ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர்.
உஷாராகக் கையாளுங்கள் மக்களே.!
இதற்கு முன் நிகழ்ந்த இது போன்ற ஸ்மார்ட்போன் வெடிப்பு சம்பவங்களில் மூன்றாம் தரப்பு சார்ஜ்ர் பயன்படுத்தியது, மூன்றாம் தரப்பு சேவை மையத்தில் சர்வீஸ் செய்தது அல்லது கீழே உடைந்து பாதிக்கப்பட்டது என்று தான் சேவை மையங்களில் காரணங்களைத் தெரிவித்து வந்தனர். ஆனால்,முதல் முறையாகப் பயனரைக் காரணம் கூறியுள்ளது இந்த முறை தான். இனி உங்கள் போனை உஷாராகக் கையாளுங்கள் மக்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக