மாஸ்டர் படத்தில் நடித்தபோது லோகேஷ்
கனகராஜால் வெறியாகி, மன உளைச்சலுக்கு ஆளானதாக விஜய் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம்
லோகேஷின் ஒர்க்கிங் ஸ்டைல்.
விஜய்
மாஸ்டர் பட
இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. இயக்குநர்
லோகேஷ் கனகராஜை விஜய் புகழ்ந்ததுடன், கலாய்க்கவும் செய்தார். லோகேஷ் பற்றி விஜய்
பேசியதாவது, இயக்குநர் லோகேஷ் மாநகரம் மூலம் திரும்பிப் பார்க்க வச்சாரு. கைதி, திரும்பத்
திரும்ப பார்க்க வச்சாரு. மாஸ்டர் என்ன பண்ணப் போறாருன்னு எனக்கு தெரியல. உங்களை
போன்றே நானும் காத்துக்கிட்டு இருக்கேன் என்றார்.
லோகேஷ்
லோகேஷ்
வந்து எனக்கு ஒரு குட்டி ஆச்சிரயம் தான். பேங்குல வேலை செஞ்சுக்கிட்டிருந்தாரு,
கட் பண்ணினால் மாநகரம். நடுவுல நண்பர்களுடன் சேர்ந்து ஷார்ட் பிலிம்ஸ்
எடுத்துள்ளார். யார்கிட்டயும் பெருசா வேலை செய்யவில்லை. அனுபவம் எல்லாம் ஒன்னும்
கிடையாது. ஆனால் அவருடைய முதல் படத்தை பார்த்தால் அப்படி ஒரு காம்ப்லிகேடட்டான
ஸ்க்ரிப்ட். அந்த பட்ஜெட்டில், குறிப்பிட்ட நாட்களில் படத்தை எடுத்ததை பார்த்து
எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்துச்சு என்று விஜய் தெரிவித்தார்.
சீன் பேப்பர்
லோகேஷ்
கனகராஜ் பற்றி முக்கியமாக ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். கையில சீன் பேப்பரே
இருக்காது. முதல் இரண்டு நாட்கள் தெறிச்சிட்டேனுங்க. யார் கையிலேயும் சீன் பேப்பரே
கிடையாது. என்னிடம் வந்து சார், நீங்க வரீங்க, அங்க நண்பர்கள் எல்லாம் இருப்பாங்க,
அந்த ஃபிரெண்ட் அப்படி ஒன்னு சொல்வாரு, அதுக்கு நீங்க இந்த மாதிரி ஒன்னு
சொல்லுங்க, அப்புறம் அந்த ஃப்ரெண்ட் அப்படி ஒன்னு சொல்வாரு, அதற்கு நீங்க அந்த
மாதிரி ஒன்னு சொல்லுங்க. அதற்கு நானோ, யோவ் எந்த மாதிரிய்யா சொல்றது என்று
கேட்டேன் என்றார் விஜய்.
மன உளைச்சல்
நான்
எல்லாம் வெறியாகி, மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். விடுடா, வீட்டுக்குப் போறேன்டா,
என்னால முடியல. அடுத்த நாலு, அஞ்சு மாசம் இவனோட என்ன பண்ணப் போறேன்னு டென்ஷனாகி,
அப்புறமா கூப்பிட்டு நண்பா, இந்த மாதிரி, அந்த மாதிரி, எந்த மாதிரியெல்லாம்
வேணாம். ஒரே மாதிரி மொத்த டீமுக்கும் சீன் பேப்பரை கொடுத்துவிடு, அதை ஃபாலோ
பண்ணுவோம் என்று சொல்லி. அதன் பிறகு தான் சீன் பேப்பர் கான்செப்டுக்கே வந்தார்னு
நினைக்கிறேன் என்று விஜய் கூறினார்.
கலாய்
அதன் பிறகு
டெய்லி காலையில் வந்து சார், சீன் பேப்பர் சார் என்பார். நம்ம ஓட்டுறானா, கிண்டல்
பண்றானா என்ற அளவுக்கு இருந்தது. இவர் பிளான் மட்டும் பண்றதில்ல, மாஸ்டர் பிளான்
பண்றார். அது தான் அவரின் வெற்றிக்கு காரணம். பாட்டில் வருவது போன்று தான் ஹார்டு
வொர்க்கும், ஸ்மார்ட் வொர்க்கும் சேர்ந்து பண்ணீங்கன்னா சீக்கிரமாகவே ஜெயிக்கலாம்
என்பதற்கு லோகேஷ் ஒரு எடுத்துக்காட்டு என்றார் விஜய். அதை கேட்ட லோகேஷ் எழுந்து
நிற்க ரொம்ப ஓவரா இருக்கு, உட்காரு என்று விஜய் கூறினார். அந்த வீடியோ தற்போது
சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
#Thalapathy �� https://t.co/jHr27PUktc
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக