இதே கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,297 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் மிகவேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 13 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பின் எண்ணிக்கை 649ஐ தொட்டுள்ளது.
மனித நேயம் மிக்க செயல்
இப்படி உலகம் முழுக்க கொரோவால் பெரும் அழிவைக் கண்டு வரும் நிலையில், ஆங்காங்கே சில மனிதாபிமானம் மிக்க செயல்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஒரு இந்திய ஸ்டார்டப் நிறுவனம், அமெரிக்காவில் தன்னால் முடிந்த அளவும் அமெரிக்கா மருத்துவ ஊழியர்களுக்கு உதவி செய்து வருவது அந்த நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இந்திய நிறுவனம்
சரி அது எந்த நிறுவனம்? அமெரிக்காவில் அப்படி என்ன உதவியை செய்து வருகிறது? அதற்காக டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பே பாராட்டியுள்ளாரா? வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம். குருகிராமை அடிப்படையாகக் கொண்ட 24 வயதான இளம் தொழிலதிபரான ரித்தேஷ் அகர்வால் என்பவரால் நிறுவப்பட்டது தான் ஓயோ நிறுவனம் .
இந்த நிறுவனம் சுற்றுலா செல்பவர்களுக்கும் ஹோட்டல் ரூம் தேவைப்படுவோர்களுக்கும் பட்ஜெட் விலையில் ஹோட்டல் ரூம்களை புக் செய்யும் மிகப் பிரபலமான ஒரு இந்திய ஸ்டார்டப் நிறுவனமாகும். சாப்ட் பேங்கின் ஆதரவுடைய இந்த நிறுவனம் பல நாடுகளில் தனது சேவையினை செய்து வருகிறது.
தங்குமிடம் இலவசம்
கொரோனா வெடிப்புக்கு மத்தியில் சிக்கியுள்ள அமெரிக்காவில் உள்ள ஒயோ ஹோட்டல் அன்ட் ஹோம்ஸ் நிறுவனம், அமெரிக்கா மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த ஊழியர்களுக்கு இலவசமாக தங்கும் இடங்களை வழங்கி வருகிறதாம். மார்ச் 24 முதல் அமெரிக்காவில் உள்ள ஓயோ ஹோட்டல்களில் இலவச தங்குமிடங்களை பெற்று வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நாம் நன்றி கடன் பட்டுள்ளோம்
மேலும் இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் அனைவரும் மக்கள் உயிரை காப்பாற்றவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும் துணிச்சலாகவும், பல தியாகங்களுடனும் பணியாற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி கடன்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்இ
வாங்கா டிரம்ப் பாராட்டு
இதையடுத்து அமெரிக்க அதிபரின் மகள் மற்றும் ஆலோசகரான இவாங்கா டிரம்ப் இந்த நிறுவனத்தின் செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும் இது நன்மை பயக்கும் செயல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓயோ வெளியிட்டுள்ள பதிவினை மறுபதிவிட்டு இப்படி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக