Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 மார்ச், 2020

"CM அ இங்க வர சொல்லுங்க..." - துள்ளிய இளைஞரை அடக்கிய போலீஸ்



நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.





3 போலீசார் ஒரு இளைஞரை பார்த்து ஏன் வெளியே சுற்றுகிறாய் என கேட்ட போது அவர் அவர்களிடம் என் உரிமை மறுக்கப்படும்போது போராட்டம் வெடிக்கும், எனக்கு கொரோனா வரும் என்றால் உங்களுக்கும் வரும். என கூறினார். அதற்கு அந்த போலிஸ் இதையெல்லாம் சிஎம்மை போய் கேள் என கூறியதற்கு

அவன் சிஎம் ஐ இங்கே வரசொல்லுங்க, ஓட்டு கேட்க மட்டும் வரராருல இப்பயும் வர சொல்லுங்க என பேசுகிறார். அதனுடன் இன்னொரு வீடியோவும் வைரலாகியுள்ளனர். அதே இளைஞர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் "சிறப்பான கவனிப்பை" பெற்றபின் தான் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருப்பேன் என கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி
வருகிறது.


உலகின் கொரோனாவின் நிலைமை அதிமாகிவிட்டது. தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்துவிட்டது. கொரோனாவின் ஆபத்தை உணர்ந்து மக்கள் எல்லாம் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் அப்பொழுது தான் கொரோனாவை நாம் வெல்ல முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக