கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தேவை முன்னை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. எனவே இணையதளத்தின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக கூகுள் பே தற்போது ஒரு புதிய வசதியை மக்களுக்காக ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தற்போது பெங்களூர் மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள நியர்பை ஸ்பாட் எனும் பகுதியில் இருக்கக்கூடிய எந்தக் கடைகளிலும் எந்த ஒரு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்ற விவரத்தை தெரிந்து கொண்டு, அங்கேயே கூகுள் பே மூலமாக வாங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா எந்த பகுதிகளில் அதிகம் உள்ளது என்று காண்பிக்க Covid 19 எனும் பகுதி தொடங்கப்பட்டுள்ளதாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த google.pay வசதி மூலம் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பக்கூடிய நிதியையும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக