கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கி இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடியும் நிலையில் நாட்டு மக்களோடு உரையாடியுள்ளார்.
அதில் பேசிய அவர் நாட்டு மக்கள் ஒன்றாக இணைந்து ராணுவ ஒழுங்கோடு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக கூறினார். மேலும் மே 3 வரை ஊரடங்கை நீட்டித்துள்ள அவர் அரசு அறிமுகப்படுத்தியுள்ள “ஆரோக்ய சேது” அப்ளிகேசனை மக்கள் தங்களது மொபைல்களில் இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆரோக்ய சேது அப்ளிகேசனை மொபைலில் இன்ஸ்டால் செய்தால் நம்மை பற்றிய சில தகவல்களை கேட்கும். அதை பூர்த்தி செய்த பிறகு அது நீங்கள் சேஃப் ஸோனில் இருக்கிறீர்களா என்பதை தெரியப்படுத்தும். இந்த அப்ளிகேசன் இன்ஸ்டால் செய்வதால் ப்ளூடூத் ஆன் செய்தபடியே இருக்கும். இதை பலரும் பயன்படுத்தும் சமயம் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் உங்கள் பகுதிகளிலோ அல்லது நீங்கள் செல்லும் சாலை பகுதிகளிலோ இருக்க நேர்ந்தால் இந்த ஆப் அதை சுட்டிக்காட்டும் என கூறப்படுகிறது.
மக்கள் அனைவரும் இந்த அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அப்ளிகேசன் கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். மொழி வாரியாக மக்கள் அதை எளிதாக உபயோகிக்க இந்திய மொழிகள் அனைத்தும் அதில் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக