>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 3 ஏப்ரல், 2020

    சிவபுராணம்..!பகுதி 188

    படைப்புக் கடவுளான பிரம்மதேவன் தன்னுடைய நான்கு புதல்வர்களுடன் வருகை தந்து நான்மறைகளின் மங்கல ஒலியை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். திருமணச் சடங்குகள் யாவும் வேதத்தில் கூறியுள்ளபடியும் மற்றும் சிவாகமத்தில் கூறியுள்ளபடியும் நிறைவாக செய்து கொண்டிருந்தனர். சகலமும் கொண்டிருந்த யோகியாக இருந்து வந்த சிவபெருமான், தடாதகை பிராட்டியாருடன் திருமணம் செய்து கொண்ட இந்த காட்சியைக் கண்டு அங்கிருந்த அனைவருக்கும் எல்லையில்லா ஆனந்தமும், உலகில் இருந்து வந்த ஜீவராசிகள் அனைத்தும் பேரின்பம் அடைந்தன.

    பின்னர் திருமால், நான்முகன், சிவகணங்கள் மற்றும் ஏனைய மற்ற தேவர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். திருமண வைபவம் இனிதே நிறைவுப்பெற்ற பின்பு சோமசுந்தரபாண்டியக் கடவுளார் பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நல்லாட்சி முறையில் நாட்டினை வழிநடத்திக் கொண்டிருந்தார். அரியணையில் வீற்றிருந்த எம்பெருமான் முப்படைகளின் அணிவகுப்புகளையும், மரியாதைகளையும் ஏற்றுக்கொண்டார்.

    பின்பு தங்களின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அமுதம் படைக்க ஆணையைப் பிறப்பித்தார். அதில் தேவர்களும், குடிமக்களும் அடங்குவர். அமுதம் உண்பதற்கு முன்பாகவே தேவர்கள் மற்றும் மக்கள் யாவரும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி தங்களின் நியமங்களை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அவ்வேளையில் திருமணத்திற்கு வந்திருந்த முனிவர் மக்களில் பதஞ்சலி மகரிஷியும், வியாக்ர பாத மகரிஷியும் எம்பெருமானான சுந்தரபாண்டியனை வணங்கி, கருணைக்கடலே...!! உலகில் உள்ள அனைத்து உயிர்களின் ஒன்றாக இருப்பவரே.... தேவரே... பொன்னம்பலத்திலே ஆடி அருளும் திருநடனத்தை காட்சி செய்த பின்பே நாங்கள் உணவு உட்கொள்வது அடியவர்களாகிய எங்களுடைய நியமம் ஆகும் என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.

    அடியார்களுடைய விருப்பங்களை அவர்களின் ஆசைப்படியே நிறைவேற்றி வைக்கக்கூடியவரான கருணைக்கடலான எம்பெருமான்... பொன்னம்பலத்தில் ஆடி அருளி உள்ள திருநடனத்தை மதுரையம்பதியிலே நடத்தி காட்டுகிறோம். விராட புருஷனுக்கு தில்லையம்பதி இருதயம் என்றும் மதுரையம்பதி துவாதசாந்தி ஸ்தானம் ஆகும் என்றும் அருளினார்.

    சோமசுந்தரனார் கூறியவற்றில் இதனை அறிந்து கொண்ட முனிவர்கள் மற்ற அவயங்கள் எங்குள்ளன என்று மிகவும் பணிவுடன் எம்பெருமானிடம் வினவினர். எம்பெருமானும் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப தன்னுடைய மற்ற அவயங்கள் எங்கெங்கு உள்ளன என்பதைப் பற்றி எடுத்துரைக்கத் துவங்கினார். அதாவது, திருவாரூர் என்பது மூலாதாரமாகவும், திருவானைக்கா என்பது சுவாதிஷ்டானமாகவும், திருவண்ணாமலை மணிபூரகமாகவும், தில்லையம்பதி அஜாகதமாகவும், திருக்காளத்தி விசுத்தியாகவும், காசி ஆஞ்சை திருக்கைலாயம் பிரம்ம மந்திரம் ஆகும்.

    இதில் மதுரையம்பதி துவாதசாந்த ஸ்தலமாகும். இதுவே மற்ற தலங்களிலேயே மேலான ஸ்தலம் ஆகும் என்று திருவாய் மலர்ந்தருளினார். எம்பெருமானின் கூற்றுக்களை கேட்ட முனிவர் பெருமக்கள் எம்பெருமானுடன் திருக்கோவிலுக்குள் மிகுந்த அமைதியுடனும், பக்தியுடனும் புகுந்தனர். சோமசுந்தர பெருமானின் சக்தியால் இந்திர விமானத்தின் கீழ்ப்பகுதியில் வெள்ளியம்பலம் உருவாகியது. அந்த வெள்ளியம்பலத்தில் ஒளிமிக்க மாணிக்கப்பீடம் ஒன்று தோன்றியது. அந்த ஒளிமிகுந்த மாணிக்கப்பீடத்தின் மீது மெய் ஒளியை தன்னகத்தே கொண்ட எம்பெருமானாகிய சுந்தர பெருமான் மெய் ஞான பேரொளி வடிவமாக வீற்றிருந்தார்.

    எம்பெருமான் அவ்விடத்தில் தோன்றிய உடனே சிவகணங்கள் மொந்தை என்ற கருவியை முழங்கினர். நந்திகேஸ்வரர் மத்தளம் என்னும் கருவியை இசைக்க துவங்கினார். திருமாலும் இடக்கை என்ற இசைக்கருவியை இசைத்தார். திரிலோக சஞ்சாரியான நாரதரும், தும்புருவும் இசை பாடினார்கள், கலைமகளோ சுருதி கூட்டிக்கொண்டு இருந்தார். சிவபெருமான் தூக்கிய இடது திருவடியானது குவிந்த செந்தாமரை மலரை போல் அமைந்திருந்தது. திருக்கரங்களிலே உடுக்கையானது அக்னியை போன்று இருந்தன. திருநீலகண்டன் சங்கு குண்டலம் கொண்ட திருச்செவியும், பறந்து விரிந்த செஞ்சடையும், வெண்ணிற திருமேனியும், விரிதல நயனங்கள் மூன்றும், பாம்புக் கச்சையும் கொண்டு உமையம்மையார்மேல் வைத்த திருப்பாவையும், புன்னகையும் கொண்டு திருநடனம் செய்து கொண்டிருந்தார்.

    சிவபுராணம் நாளையும் தொடரும்....

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக