Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

சிவபுராணம் - பாகம் 2. பகுதி 002

அப்பூதியடிகள் நாயனார்

வளமை மிகுந்த சோழ நாட்டில் உள்ள பெருமை வாய்ந்த ஒரு திருத்தலம் திங்களூர் ஆகும். காண்போரை வசீகரிக்கும் சோலைகள் மற்றும் எழில்மிகு தோற்றம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு திருத்தலமாகும். இத்தலத்தில் பல சிவதொண்டர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அப்பூதி அடிகளார். இவர் அந்தணர் குலத்திலேயே பிறந்து வளர்ந்தவர் ஆவார். இறைவனது திருவடிகளில் என்றும் மறவாது வணங்கி அனைவரிடத்திலும் மேன்மையும், கீர்த்தியும் கொண்டவர் ஆவார்.

அப்பூதி அடிகளார் தனது இல்லாள் மற்றும் புத்திரர்களுடன் இல்லறத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இறைவன் திருவிளையாடல் நிகழ்த்தி எங்கெல்லாம் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாரோ அவ்விடத்திற்கு எல்லாம் சென்று இறைவனை வழிபடும் அரும்பெரும் தவத்தினர். தனது சிந்தனை யாவற்றிலும்... எப்பொழுதும்... எம்பெருமானின் நாமங்களையும், அவர் போற்றிகளையும் எண்ணி கொண்டிருப்பவர். மற்றவர்களின் பொருள் மீது ஆசையோ, பிறரை ஏமாற்றியோ, காமம் மற்றும் சினம் போன்ற குற்றங்கள் எள்ளளவும் சிந்தனையில் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

அருந்தவத்தினரான அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார். திருநாவுக்கரசர் சுவாமிகளை நேரில் பாராமலேயே அவர் தம் திருவடிகளை நினைத்து போற்றி வணங்கி அவரிடம் பேரன்புடையவராய் விளங்கினார். தான் பெற்ற புத்திரர்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் அவரால் அமைக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் முதலானவற்றிற்கெல்லாம் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.

திருநாவுக்கரசரும், அப்பூதி அடிகளாரும் சந்திக்கும் ஒரு நெகிழ்வான தருணம் உருவானது. திருநாவுக்கரசர் இறைவனைத் தரிசிக்க திங்கள%2Bர் வருகை தந்தார். அவ்விடத்தில் பெரிய தண்ணீர் பந்தல் ஒன்றைப் பார்த்தார். கோடைக்காலத்தின் கொடுமை தெரியாதிருக்கும் வண்ணம் பந்தலைச் சற்றுப் பெரிதாகப் போட்டுக் கீழே மணலைப் பரப்பி குளிர்ந்த நீரை நிரப்பி வைத்திருந்தனர். இதனால் அங்கு தண்ணீர் அருந்தி விட்டுத் தங்குவோர்க்கு சற்று வெம்மையைத் தணித்துக் கொள்ளவும் மார்க்கமிருந்தது.

அருளுடையார் திருவுள்ளத்தைப் போல் குளிர்ந்த தன்மையுடையதாய் அந்த தண்ணீர்ப் பந்தல் அமைந்துவிட்டதால் அந்நிழலில் எப்பொழுதும் மக்கள் திரள்திரளாக வந்து தங்கிச்சென்ற வண்ணமாகவே இருப்பர். இப்பந்தலைப் பார்த்த அப்பர் அடிகள் இவற்றையெல்லாம் எண்ணி உள்ளம் மகிழ்ந்தார். அத்தோடு இவர் பந்தலின் எல்லா பாகங்களிலும் அழகுபட திருநாவுக்கரசு என்று எழுதியிருப்பதையும் பார்த்தார்.

தமது பெயர் பந்தல் முழுவதும் இருப்பதைக் கண்டதும் அடியார்க்கு வியப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது. பின்பு அங்கு இருந்தவர்களை நோக்கி இந்த தண்ணீர் பந்தலுக்கு திருநாவுக்கரசர் பெயரிட்டவர் யார் என்று கேட்டார்? திருநாவுக்கரசர் இக்கேள்வியை கேட்டதும் அங்குக் கூடி இருந்தவர்களில் ஒருவர் இந்த தண்ணீர் பந்தலுக்கு இப்பெயரை இட்டவர் அப்பூதி அடிகள் என்பவர் தான் என்று கூறினார். அவர் தான் இந்த தண்ணீர் பந்தலை அமைத்து அடியார்க்கும், மக்களுக்கும் நற்பணிகளை ஆற்றிவருகின்றார். இவை மட்டும் அல்லாமல் அவரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளுக்கும், குளங்களுக்கும் திருநாவுக்கரசர் என்னும் இப்பெயரையே சூட்டியுள்ளார் என்று மிகவும் பெருமையுடன் கூறினார்.

தனது பெயரை சூட்டி இருக்கும் அப்பூதி அடிகளாரை காண வேண்டும் என்ற விருப்பம் திருநாவுக்கரசருக்கு ஏற்பட்டது. பின்பு அங்கிருந்தவர்களிடம் அப்பூதி அடிகளார் யார் என்றும்? அவர் இருக்கும் இடத்தை உரைக்குமாறும் வினவினார். அடியார்களில் சிலர் அப்பூதி அடிகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கின்றோம் என்று உரைத்து அப்பூதி அடிகளாரின் இருப்பிடத்திற்கு திருநாவுக்கரசரை அழைத்துச் சென்றனர். அப்பூதி அடிகளார் தமது இல்லத்தில் சிவநாம சிந்தனையுடன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது தனது இல்லத்தை நோக்கி அடியவர்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருப்பதைக் கண்டதும், யாரோ ஒரு பெரிய சிவனடியார் இங்கு வந்துள்ளார்கள் என்பதையும், அவர் தனது இல்லத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டார்.

பின்பு இல்லத்திலிருந்து வாசலுக்கு வந்து அவர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்றார். அடியவர் கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த அடியார் தங்களை காண தங்களின் இல்லத்திற்கான வழியை வினவினார். அதற்காக அவரை இங்கே அழைத்து வந்தோம் என்று கூறினார். அப்பூதி அடிகளும், திருநாவுக்கரசரை வணங்கி அவரை தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவரை ஆசனத்தின் மீது அமர வைத்தார். பின்பு அவரிடம் தாங்கள் யார்? என்றும் தாங்கள் எதற்காக என்னை காண வேண்டும்? என்றும் யான் தங்களுக்கு ஏதாவது பணி செய்தல் வேண்டுமா? என்றும் மிகவும் பணிவுடன் உள்ளம் உருக வினவினார். அதற்கு திருநாவுக்கரசரோ தான் திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு திங்கள%2Bரில் இருக்கும் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்திருப்பதாக கூறினார். அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் சிலர் உங்களைப் பற்றி கூறிக்கொண்டிருந்ததை கேட்டறிந்தேன்.

தாங்கள் அடியார்க்கு வேண்டும் உதவிகள் செய்து வருவதையும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் செயல்களை புரிவதில் சிறந்தவர் என்றும் அறிந்தேன். அதை அறிந்ததும் உங்களை காண வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காகவே யாம் அவர்களிடம் தங்களது இல்லத்திற்கான வழிகளை கேட்டறிந்து இவ்விடம் வந்து இருப்பதாக கூறினார். இவ்விதம் திருநாவுக்கரசர் எடுத்து கூறியதும் தங்களின் எண்ணப்படியே அனைத்தும் நன்மையாக நடைபெறும் என்று கூறினார் அப்பூதி அடிகளார். பின்பு திருநாவுக்கரசர் மீண்டும் அப்பூதி அடிகளாரிடம் தனது மனதில் எழுந்த ஒரு கேள்வியை கேட்கத் தொடங்கினார்.

அதாவது தாங்கள் செய்யும் அனைத்து நற்செயல்களுக்கும் தங்களின் பெயர்களை எவ்விடத்திலும் உபயோகிக்காமல் மற்றொருவரின் பெயரை உபயோகிக்கின்றீர்களே, இதற்கு ஏதாவது உட்பொருள் இருக்கின்றதா என்பதை யாம் அறிந்து கொள்ள இயலுமா? என்று கேட்டார். அப்பூதி அடிகளார் இவரின் பேச்சைக் கேட்டதும் மனதில் ஒருவிதமான வருத்தம் அடைந்தார். ஏனெனில் திருநாவுக்கரசரை யார் என்று அறியாமல் இவர் மற்றொருவர் என்று உரைத்தது இவர் மனதை பெரிதும் காயப்படுத்தியது. மனதில்பட்ட காயமானது அவர் கண்களிலும் அவர் பேச இருக்கின்ற வார்த்தையிலும் வெளிப்படத் தொடங்கியது.

அதாவது திருநாவுக்கரசர் யார் என்று அறியாமல் நீர் மற்றொருவர் என்று கூறுகிறாயே என்று சினத்துடன் அவர்மீது கோபம் கொண்டு பேசத் துவங்கினார். சைவ திருக்கோலம் பூண்டு உள்ள தாங்களோ இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமோ? யார் நீங்கள்? எங்கிருந்து வந்து இருக்கின்றீர்கள்? உமது பூர்வீகம் என்ன? என்று சினம் கொண்டு அவரிடம் ஒவ்வொரு கேள்விகளாக கேட்க தொடங்கினார். திருநாவுக்கரசரோ எவ்விதமான கோபமும் இல்லாமல் அடியாரே அமைதி கொள்வீர்களாக! சினம் கொள்ள வேண்டாம். அடியேனுக்கு அவரை பற்றி தெரியாததால்தான் யாம் தங்களிடம் அவரை பற்றி கேட்டேன் என்று கூறினார். அப்பூதி அடிகளார் அவரின் அறியாமையை எண்ணி உம்மொழியை யாம் ஏற்கின்றோம் என்று உரைத்து திருநாவுக்கரசரையா யார் என்று கேட்டீர் அல்லவா? கூறுகிறேன். கேட்பீர்களாக!.

அப்பூதி அடிகளார், தங்களுக்கு ஏதாவது பணி செய்தல் வேண்டுமா? என்று மிகவும் பணிவுடன் உள்ளம் உருக திருநாவுக்கரசரிடம் வினாவினார். அதற்கு திருநாவுக்கரசரோ தான் திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு திங்கள%2Bரில் இருக்கும் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்திருப்பதாக கூறினார். அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் சிலர் உங்களைப் பற்றி கூறிக்கொண்டிருந்ததை கேட்டறிந்தேன். தாங்கள் அடியார்க்கு வேண்டும் உதவிகள் செய்து வருவதையும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் செயல்களை புரிவதில் சிறந்தவர் என்றும் அறிந்தேன். அதை அறிந்ததும் உங்களை காண வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காகவே யாம் அவர்களிடம் தங்களது இல்லத்திற்கான வழிகளை கேட்டறிந்து இவ்விடம் வந்து இருப்பதாக கூறினார்.

இவ்விதம் திருநாவுக்கரசர் எடுத்து கூறியதும் தங்களின் எண்ணப்படியே அனைத்தும் நன்மையாக நடைபெறும் என்று கூறினார் அப்பூதி அடிகளார். பின்பு திருநாவுக்கரசர் மீண்டும் அப்பூதி அடிகளாரிடம் தனது மனதில் எழுந்த ஒரு கேள்வியை கேட்கத் தொடங்கினார். அதாவது தாங்கள் செய்யும் அனைத்து நற்செயல்களுக்கும் தங்களின் பெயர்களை எவ்விடத்திலும் உபயோகிக்காமல் மற்றொருவரின் பெயரை உபயோகிக்கின்றீர்களே, இதற்கு ஏதாவது உட்பொருள் இருக்கின்றதா என்பதை யாம் அறிந்து கொள்ள இயலுமா? என்று கேட்டார். அப்பூதி அடிகளார் இவரின் பேச்சைக் கேட்டதும் மனதில் ஒருவிதமான வருத்தம் அடைந்தார். ஏனெனில் திருநாவுக்கரசரை யார் என்று அறியாமல் இவர் மற்றொருவர் என்று உரைத்தது இவர் மனதை பெரிதும் காயப்படுத்தியது. மனதில்பட்ட காயமானது அவர் கண்களிலும் அவர் பேச இருக்கின்ற வார்த்தையிலும் வெளிப்படத் தொடங்கியது.

அதாவது திருநாவுக்கரசர் யார் என்று அறியாமல் நீர் மற்றொருவர் என்று கூறுகிறாயே என்று சினத்துடன் அவர்மீது கோபம் கொண்டு பேசத் துவங்கினார். சைவ திருக்கோலம் பூண்டு உள்ள தாங்களோ இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமோ? யார் நீங்கள்? எங்கிருந்து வந்து இருக்கின்றீர்கள்? உமது பூர்வீகம் என்ன? என்று சினம் கொண்டு அவரிடம் ஒவ்வொரு கேள்விகளாக கேட்க தொடங்கினார். திருநாவுக்கரசரோ எவ்விதமான கோபமும் இல்லாமல் அடியாரே அமைதி கொள்வீர்களாக! சினம் கொள்ள வேண்டாம். அடியேனுக்கு அவரை பற்றி தெரியாததால்தான் யாம் தங்களிடம் அவரை பற்றி கேட்டேன் என்று கூறினார். அப்பூதி அடிகளார் அவரின் அறியாமையை எண்ணி உம்மொழியை யாம் ஏற்கின்றோம் என்று உரைத்து திருநாவுக்கரசரையா யார் என்று கேட்டீர் அல்லவா? கூறுகிறேன். கேட்பீர்களாக!.

சமணத்தின் காரணமாக அறநெறி தவறி நெறி இழந்த மன்னனுக்கு நல்ல அறிவை புகட்டி சைவ சன்மார்க்கத்தின் நெறியை உலகோருக்கு அறியும் வகையில் உணர்த்தியவர். இறைவனுக்கு செய்யும் திருத்தொண்டால் இம்மையிலும் வாழலாம் என்ற மெய் நிலையை நிரூபித்துக் காட்டிய ஒப்பற்ற தவசீலர் திருநாவுக்கரசர் ஆவார். அவ்வளவு சிறப்பு வாய்த்த அந்த அடியாரின் திருப்பெயரை தான் செய்யும் நற்பணிகளுக்கு எல்லாம் சூட்டியுள்ளோம் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையா? இவ்வளவு சிறப்பு வாய்ந்த அடியாரை பற்றி அறியாது தாங்கள் அவரை மற்றொருவர் என்று உரைக்க எம்புலன்கள் கேட்க நான் என்ன பாவம் இழைத்தேனோ? என்னுடைய தேவருக்கு இப்படி ஒரு நிலை தங்களைப் போன்ற ஒரு அடியார்களால் ஏற்படும் என்று என்னால் எள்ளளவும் நினைக்க இயலவில்லையே! என்றெல்லாம் பலவாறு தனது மனதில் இருந்து வந்த கவலைகளை உரைத்து வெளிப்படுத்தனார் அப்பூதி அடிகளார்.

அடிகளார் தம் மீது கொண்டுள்ள வியக்கத்தக்க பக்தியையும், அன்பையும் கண்டு அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து, சைவம் அடைந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய நாவுக்கரசன் யானே! என்றார். திருநாவுக்கரசர் இவ்வாறு கூறியதை கேட்டு அப்பூதி அடிகள் மெய் மறந்து நின்றார். அவரின் கைகள் இரண்டும் அவரை அறியாமல் சிரமேற் குவிந்தன. கண்கள் குளமாகி அருவியாகி ஆறாகி ஓடின. மெய் சிலிர்த்தது. பெருமகிழ்ச்சி கொண்ட அப்பூதி அடிகள், அன்பின் பெருக்கால் திருநாவுக்கரசரின் மலர் அடிகளில் வீழ்ந்து இரு கைகளாலும் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அப்பர் அடிகளும் அப்பூதி அடிகளை வணங்கி, ஆலிங்கனம் செய்து கொண்டார். இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பூதி அடிகளாரின் இல்லத்தில் கூடியிருந்த அன்பர்கள் திருநாவுக்கரசரைப் பணிந்தனர். அவரது அடக்கத்தையும், பெருமையையும் வானளாவப் புகழ்ந்தனர்.

கைலாச வாசனே! நேரில் வந்ததுபோல் பெருமிதம் கொண்ட அப்பூதி அடிகள், சற்று முன்னால் தாம் சினத்தோடு பேசியதை மன்னிக்கும்படி அப்பர் அடிகளிடம் கேட்டார். அப்பூதியார், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க உள்ளே ஓடி மனைவி மக்களை அழைத்து வந்தார். எல்லோரும் சேர்ந்து திருநாவுக்கரசரின் மலரடியை பன்முறை வணங்கினர். பிறகு அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை வழிபாட்டிற்கு எழுந்தருளச் செய்தார். பாத கமலங்களைத் தூய நீரால் கழுவிப் புத்தம் புது நறுமலரை குவித்து திருநாவுக்கரசரை வணங்கினார். அவரது பாதங்களைக் கழுவிய தூய நீரைத் தம்மீதும், தம் மனைவி மக்கள் மீதும் தெளித்துக் கொண்டார். அதன்பின் தானும் பருகினார். திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளின் அன்பிற்குக் கட்டுப்பட்டு உலகையே மறந்தார்.

பிறகு திருநீற்றை எடுத்து அப்பூதி அடிகளுக்கும், அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அளித்தார். அடிகளும், அவர்தம் குடும்பத்தினரும் நெற்றி முழுமையும், மேனியிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டனர். அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரிடம், ஐயனே... எமது இல்லத்தில் திருவமுது செய்து எமக்கு அருள் புரிய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி நின்றார். அப்படியே ஆகட்டும் என்று அடியாரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்தார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசர் சம்மதிக்கவே அகம் மகிழ்ந்துபோன அப்பூதி அடிகளும், அவர் மனைவியும், என்ன பேறு பெற்றோம் இங்கே அமுதுண்ண ஐயன் இசைந்தது. அம்பலத்தரசரின் திருவருட் செயலன்றோ இஃது என்று எண்ணி மகிழ்ந்தனர். அவரது மனைவி அறுசுவை அமுதிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். சற்று நேரத்தில் நால்வகையான அறுசுவை உண்டி தயாரானது.

அப்பூதி அடிகளாரின் மனைவியார், பெரிய திருநாவுக்கரசிடம் வாழையிலையை அறுத்து வருமாறு கூறினாள். அன்னையாரின் கட்டளையை கேட்டு மூத்த திருநாவுக்கரசு தனக்கு இப்படியொரு அரும்பணியை நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததே என பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து இலை எடுத்துவர தோட்டத்திற்கு விரைந்தோடினான். பின்புறம் அமைந்திருந்த தோட்டத்திற்குச் சென்ற அக்குமாரன் பெரியதொரு வாழைமரத்திலிருந்து குருத்தை அரியத் தொடங்கினான். அப்பொழுது வாழைமரத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்த கொடிய பாம்பு ஒன்று அச்சிறுவனின் கையை வளைத்துக் கடித்தது. பயங்கரமாக அலறினான் பெரிய திருநாவுக்கரசு.

கையில் பாம்பு சுற்றியிருப்பதைப் பார்த்ததும் அவசர அவசரமாக உதறித் தள்ளினான். பாம்பு கடித்ததைப்பற்றி அப்பாலகன் வருந்தவில்லை. உயிர்போகும் முன் பெற்றோர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பற்றித்தான் கவலைப்பட்டான். தன்னைப் பாம்பு கடித்த விஷயத்தை எவரிடமாவது கூறினால் நல்லதொரு காரியத்திற்குத் தடை ஏற்பட்டு விடும் என்று எண்ணி பேசாமல் தன் கடமையைச் செய்யக் கருதினான். அதுவரை விஷம் தாங்குமா என்ன? பாலகனின் உடம்பில் ஏறிய விஷம் சிறுகச்சிறுக தன் வேலையைச் செய்யத் தொடங்கியது. இலையும் கையுமாக வீட்டிற்குள்ளே ஓடினான் அப்பாலகன்.

பாலகன் தன் பெற்றோரிடம் இலையைக் கொடுப்பதற்கும், விஷம் உடலெங்கும் பரவி அவன் சுருண்டு விழுந்து உயிரை விடுவதற்கும் சரியாக இருந்தது. மகன் சுருண்டு விழுந்ததை கண்டு பெற்றோர்கள் ஒரு கணம் பயந்தனர். மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட உணர முடியாத நிலையில் சற்று நேரம் செயலற்று நின்றார்கள். நீலம் படிந்த மகனின் உடலைப் பார்த்ததும் பாம்பு கடித்து இறந்தான் என்பதை உணர்ந்தனர். பெற்றோர்கள் உள்ளம் பதைப்பதைத்து போனது. அவர்களுக்கு அலறி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால், என்ன செய்ய முடியும்? மனதில் எழுந்த துக்கத்தை அடக்கிக் கொண்டனர்.

மகனின் உயிரைக் காட்டிலும் தொண்டருக்கு வேண்டிய பணிகளை செய்வதே முதன்மையான கடமையாகும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு தொண்டருக்கு தெரியாத வகையில் தன் மகனின் உடலைப் பாயால் சுற்றி ஒரு மூலையில் ஒதுக்கமாக வைத்தனர். மனதில் இருந்து வந்த சோகங்கள் யாவற்றையும் அகத்தே வைத்துக்கொண்டு முகத்தில் மகிழ்வுடன் காட்சி அளித்தனர். எவ்விதமான தடுமாற்றமும் இன்றி மலர்ந்த முகத்துடன் அப்பூதி அடிகளார் அப்பர் அடிகளை அமுதுண்ண அழைத்தார். பின்பு அவருடைய திருவடிகளை தூய நீரால் சுத்தம் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார்கள்.

ஆசனத்தில் அமர்ந்த திருநாவுக்கரசர் அனைவருக்கும் திருநீறு அளிக்கும்போது அனைவரும் இருந்த போதும் அப்பூதி அடிகளின் மூத்த மகனான திருநாவுக்கரசனைக் காணாது வியப்பு ஏற்பட பின்பு அவர்களிடம் மூத்த மகன் எங்கே என்று கேட்டார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அப்பூதி அடியார் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவருடைய கண்கள் கலங்க துவங்கியது. அப்பூதி அடியார்களிடம் காணப்பட்ட இந்த மாறுதல்களை கண்டதும் இங்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார் திருநாவுக்கரசர். மீண்டும் திருநாவுக்கரசர் அப்பூதி அடியாரை நோக்கி மூத்;த மகன் எங்கே என்று கேட்பதற்குள் அப்பூதி அடியார் திருநாவுக்கரசரிடம் என்னுடைய மூத்த புதல்வன் இந்நிலையில் இங்கு உதவான் என்று கூறினார்.

அப்பூதி அடியாரின் கூற்றினை கேட்ட திருநாவுக்கரசர் தாங்கள், என்னிடம் ஏதோ உண்மையை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் பதில் என் உள்ளத்திற்கு திருப்தியை அளிக்கவில்லை என்று கூறினார். திருநாவுக்கரசரின் பதிலால் இனியும் உண்மையை மறைக்க இயலாமல் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் விளக்கமாக எடுத்துக்கூறினார் அப்பூதி அடிகள்.

அப்பூதி அடியார் கூறியவற்றை கேட்ட பின்பு மனம் வருந்திய திருநாவுக்கரசர் என்ன காரியம் செய்தீர்கள் என்று அவரை கடிந்து கொண்டே மூத்த மகன் திருநாவுக்கரசின் உடலைப் பார்க்க உள்ளே சென்றார். திருநாவுக்கரசின் உடலைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தன் மனதில் பல கேள்விகளுடன் என்ன செய்வது? என்று அறியாமல் மனம் வெதும்பினார். பின்பு, காலம் தாமதிக்காமல் திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளின் புதல்வனின் பூத உடலை எடுத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு புறப்பட்டார்.

திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளாரின் பாலகனைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் செய்தியை அறிந்ததும் ஊர் மக்கள் அவ்விடம் திரண்டனர். திருத்தலத்திற்கு சென்றதும் புதல்வனின் உடலை வைத்து விட்டு திங்கள%2Bர் பெருமானை திருநாவுக்கரசர் மெய் மறந்து உருகிப் பாடினார். ஒன்று கொல்லாம் என்னும் திருப்பதிகத்தை திருநாவுக்கரசர் பாடினார். திருநாவுக்கரசரின் பக்தியிலே பரம்பொருளின் அருள் ஒளி பிறந்தது.

பரம்பொருளின் அருள் ஒளி பட்டதும் மூத்த திருநாவுக்கரசு உறக்கத்தில் இருந்து எழுந்திருப்பவன் போல் எழுந்தான். பாலகன் தூக்கத்தில் இருந்து எழுந்து திருநாவுக்கரசரின் காலில் விழுந்து வணங்கினான். உயிர் இழந்த பாலகன் உயிர் பெற்று வருவதைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவருக்கும் வியப்பும், அப்பரடிகளின் (திருநாவுக்கரசரின்) பக்திக்கும், அருளுக்கும் மற்றும் அன்பிற்கும் அனைவரும் தலை வணங்கி நின்றனர். ஆலயத்திற்குள் கூடியிருந்து அன்பர்கள் கூட்டம் அப்பர் பெருமானைக் கொண்டாடி போற்றியது.

தனது புதல்வனை உயிருடன் கண்டதும் அப்பூதி அடிகளாரும் அவரின் துணைவியாரும் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையில்லாத வகையில் இருந்தது. பின்பு, அவர்கள் தங்கள் புதல்வனை ஆரத்தழுவி தங்களது மன வேதனையை குறைத்துக் கொண்டனர். இதற்கு காரணமாக இருந்த அப்பர் அடியார்க்கும் தங்கள் நன்றியை கூறினர். ஆனால் அப்பூதி நாயனாரும், அவரின் மனைவியாரும் தங்கள் புத்திரன் பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷம் அடையாமல், திருநாவுக்கரசர் திருவமுது செய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள்.

திருநாவுக்கரசர் அதனை அறிந்து, அவர்களோடு வீட்டிற்குச் சென்று அப்பூதி நாயனாரோடும், அவர் புத்திரர்களோடும் சேர்ந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்கு சென்றார். அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் திருத்தொண்டு பல புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமானின் சேவடி நிழலை அடைந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக