>>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • >>
  • டிஸ்னி இன்ஜினியர் அனைத்தையும் இழந்தார்—ஒரு AI புகைப்பட ஆப்பிற்காக!
  • >>
  • மர்மம் நிறைந்த இந்தியாவின் ரகசிய கோவில் – குல்தரா செவ்வேளூர் கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 28 ஏப்ரல், 2020

    சிவபுராணம் - பாகம் ‌‌2 பகுதி 006

    இசைஞானியார் நாயனார் !!

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் நாயன்மார்கள் மொத்தம் மூன்று பேர். அவர்களில் ஒருவர் தான் இசைஞானியார் ஆவார். திருவாரூர் என்னும் வளம் நிறைந்த ஊரில் வாழ்ந்து வந்த கௌதம கோத்திரத்தில் அவதரித்தவர் ஞானசிவாச்சாரியார் என்பவர். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார்.

    சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தும், வளர்ந்தும் வந்தார். அவர் திருவாரூர் இறைவரது திருவடிகளை என்றும் மறவாது நினைவில் கொண்டு வாழ்ந்து வந்தார். குழந்தைப் பருவம் முடிந்து திருமணப் பருவத்தை அடைந்ததும் ஞான சிவாச்சாரியார் தனது மகளை சடைய நாயனாருக்கு திருமணம் செய்து வைத்தார்.

    சடைய நாயனாரோடு இல்வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியிலும், அவரை வழிபடுவதிலும் எவ்விதமான குறைகள் இன்றி வாழ்ந்து வந்தனர். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பேறு பாக்கியத்தை இசைஞானிப் பிராட்டியாருக்கு அருளினார்.

    தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவமந்திரங்கள் மற்றும் சிவபோற்றிகளை கற்பித்த மிகச் சிறந்த சிவபக்தை. இவருக்கு பிறந்த சுந்தரமூர்த்தி நாயனார் சமயக்குரவர்களில் ஒருவராவர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக