சந்திரன் ஒரு பெண் ராசியாகும். சந்திரன், ஒரு ராசியைக் கடக்க 2 1/4 நாட்கள் ஆகும். சந்திரனுக்கு பகைவீடு இல்லை.
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே, ரஜனிபதி, சுகுபராக, இந்து, மதி ஆகியவைகள் சந்திரனின் வேறு பெயர்கள் ஆகும்.
லக்னத்திற்கு 6-ம் இடத்தில் சந்திரன் இருந்தால் சந்திரனுக்குரிய அனைத்து நோய்களும் வரக்கூடும்.
மேலும், சந்திரன் அசுப பலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.
6ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.
👉 மிருதுவான தேகத்தை உடையவர்கள்.
👉 தேவையற்ற எண்ணங்களால் மனவருத்தம் ஏற்படலாம்.
👉 எதிர்ப்புகளை தானே உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.
👉 இளம் வயதில் போராட்டத்தை சந்திக்கக்கூடியவர்கள்.
👉 மற்றவருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடியவர்கள்.
👉 எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படக்கூடியவர்கள்.
👉 ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.
👉 ஞாபக மறதி ஏற்படும்.
👉 எதையும் நிதானமாக செய்யும் குணம் கொண்டவர்கள்.
👉 தனம் சார்ந்த செயல்பாடுகளில் மனக்கசப்புகள் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக