>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 16 ஏப்ரல், 2020

    பலம் பலவீனம் !

    நம்முடைய முழு பலம், பலவீனம் என்ன என்பது நமக்குத் தெரியாது. பலம், பலவீனத்தை முழுமையாக தெரிந்து கொண்டால் வாழ்வில் நம்முடைய பலவீனங்களை பலமாக மாற்றி வெற்றியடைய முடியும்.

    பலம் மற்றும் பலவீனம் இரண்டையும் தக்க சமயத்தில் பயன்படுத்த வேண்டும். இங்கு பலம் கொண்ட ஒரு யானை தன்னுடைய பலம், பலவீனம் இவற்றை எவ்வாறு கையாளுகிறது என்பதை பார்ப்போம்.

    ஒரு ஊரில் பிரபலமான கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலில் கோவில் யானைகள் இருந்தன. அந்த கோவிலில் யானைகளை அன்புடன் வளர்த்து வந்தனர். அந்த யானைகளை தினமும் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி நெற்றியில் பட்டை தீட்டி அழகுப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்வதற்கு யானைப் பாகன் ஒருவனை கோவில் நிர்வாகம் நியமித்து இருந்தது.

    யானைப் பாகன் ஒரு நாள் வழக்கம்போல் அந்த கோவில் யானைகளை அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றான். அந்த யானைகளைக் குளிப்பாட்டி நெற்றியில் பட்டை தீட்டி அழகுபடுத்தி அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். ஒரு ஒடுக்கமான பாலத்தில் யானைகள் வரும் போது இரண்டு பூனைகள் எதிரிலே வந்தன.

    அதில் ஒரு பூனை மட்டும் சேற்றில் விழுந்து எழுந்த நிலையில் சேற்று உடலுடன் தன்னுடைய வாலை ஆட்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தது. சேற்றில் விழுந்து எழுந்து வந்த பூனையைப் பார்த்ததும் யானைகளில் ஒரு யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டது. அந்தப் பூனை, எதிரே இருந்த இன்னொரு பூனையிடம், பார்த்தாயா, உருவத்திலும், பலத்திலும் உயர்ந்த அந்த யானைகளே என்னைக் கண்டு பயந்து எனக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது என்று சொல்லி சிரித்தது.

    அந்த பூனை சொல்லி சிரிப்பதைப் பார்த்து யானைகளில் ஒரு யானை, அந்த பூனைக்கு ஒதுங்கி வழிவிட்ட யானையைப் பார்த்து நீ அந்த சேற்றில் விழுந்து எழுந்து வந்த பூனையைப் பார்த்து பயந்துதான் அதற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றாயா? என்று கேட்டது. அதற்கு அந்த யானை நான் தவறி இடறி அந்த பூனையின் மேல் விழுந்து விட்டால் அந்த பூனை நசுங்கி இறந்து விடும்.

    மேலும் நான் ஆற்றங்கரையில் நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக இருக்கிறேன். அதனால் நான் அந்த சேற்றில் விழுந்து எழுந்து வந்த அப்பூனையின் மேல் விழுந்தால் நானும் அந்தப் பூனையைப்போல் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால் தான் நான் ஒதுங்கி அந்த பூனைக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றேன் என்றது.

    தத்துவம் :

    அடக்கத்தில் சிறந்தவர்கள் தன்னிடம் உள்ள பலம், பலவீனம் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களின் பலத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்து இருப்பார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக