இந்திய ரீடைல் சந்தைக்குள் எப்படியாவது நுழைந்திட வேண்டும் என்ற மாபெரும் திட்டத்தில் இருந்த வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது ஆட்டத்தைச் சிறப்பாகச் செய்துகொண்டு இருக்கிறது. கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் நாடு முழுவதும் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், இந்நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த அச்சத்தில் இருந்தனர்.
21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் பேசிய பிளிப்கார்ட் நிறுவனத்தின் சீஇஓ கிரிஷ் கல்யாணமூர்த்தி பிளிப்கார்ட் பாதுகாப்பாகவும், நிதியியல் ரீதியாக வலிமையாகவும் உள்ளது. அதனால் கவலைப்பட வேண்டாம், தற்போது எங்களுடைய முக்கியமான குறிக்கோள் ஊழியர்களின் பாதுகாப்பு தான் என்று தெரிவித்துள்ளார் என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் கவலை
கொரோனாவின் தாக்கத்தின் காரணமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஊழியர்களைக் கண்டிப்பாகப் பணிநீக்கம் செய்யும், அது மட்டும் அல்லாமல் சம்பளத்தையும் குறைக்கும் என இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பல நாட்களாக விவாதம் நடந்து வந்தது.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கிரிஷ் கல்யாணமூர்த்தி பேசியுள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தகம் குறைந்துவிட்டதாலும், முதலீடு கிடைக்காத காரணத்தினாலும் ஸ்டார்ட்அப் ஐடி நிறுவனத்தை நடத்த போதுமான நிதி இல்லாமல் தவிக்கிறது. இதனால் பெரிய அளவில் அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த அழுத்தத்தைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஸ்டார்ட்அப் ஐடி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
12 லட்சம் ஊழியர்கள்
இந்தியாவில் ஐடி துறையில் 45 - 50 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 10 - 12 லட்சம் பேர் ஸ்டார்ட்அப் நிறுவன பணிகளில் உள்ளனர். இந்தப் பாதிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் பெரும் ஐடி நிறுவனங்களிலும் நிகழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக