கணம்புல்ல நாயனார் !!
வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்தில் வாழ்ந்து வந்த மக்களில் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் கணம்புல்லர். அங்கு பெருங்குடி மக்களுள் ஒருவராய் வாழ்ந்து வந்தார். ஆயினும் அவரது மனதில் எந்தவிதமான செருக்கும் இன்றி அனைவரிடத்திலும் அன்பு கொண்டிருந்தார். சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு விளங்கினார்.
வாழும் வாழ்க்கையில் உண்மையான மெய்பொருள் என்பது இறைவனின் திருவடியை அடைவதே... என்பதை நன்கு உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் தனது செயல்களை செய்து கொண்டு வந்திருந்தார். எம்பெருமான் எழுத்தருளிருக்கும் கோவில்களில் தீப ஒளி ஏற்றுவதால், மானுட பிறவியில் மனதில் கொண்டுள்ள இருள் என்னும் அஞ்ஞானம் அகன்று, ஞானஒளி பிறந்து, இன்ப வீட்டை அடைய வழி பிறக்கும் என்பதனை உணர்ந்தார்.
அதாவது, எம்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் தீபம் ஏற்றி அவரது கீர்த்தனை பாடி மகிழ்வதே மிகுந்த பாக்கியமாக கருதி அதை எள்ளளவும் தவறாமல் செய்து கொண்டு வந்திருந்தார். தொடர்ந்து இப்பணிகளை செய்து வந்தமையால் அவரிடம் இருந்த செல்வமும் குறையத் துவங்கியது. பொருள் செல்வம் குறைந்து வறியவராய் இருக்குவேள%2Bரில் இருக்க விருப்பம் இல்லாமல் தம்மிடமுள்ள நிலபுலன்களை விற்றார். அதில் கிடைத்த பொருட்செல்வத்தை கொண்டு சிவ யாத்திரையை மேற்கொண்டார்.
ஊர் ஊராகச் சென்று கோவில்தோறும் நெய் விளக்கேற்றியவாறு தில்லையை வந்தடைந்தார். தில்லையை அடைந்து அங்கு எழுத்தருளியிருக்கும் எம்பெருமானைப் பணிந்து பேரின்பம் பூண்டார். தில்லையப்பநாதரை விட்டுச் பிரிந்து செல்ல மனமில்லாத அடிகளார் அவ்வூரில் தனியாக வீடு எடுத்து வசித்துக் கொண்டு இருந்தார். அடியார் அந்த ஊரில் தங்கியிருந்து எம்பெருமானை மனம் உருகிப் போற்றி விளக்கேற்றும் திருப்பணியை மேற்கொண்டு வந்தார். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை மேற்கொண்ட அடியாருக்கு மீண்டும் வறுமை ஏற்படத் துவங்கியது.
தன்னிடமுள்ள பொருட்செல்வம் குறைய துவங்கிய நிலையில் தான் செய்ய எண்ணிய பணியை எவ்வித இடர்பாடும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். ஒரு சமயத்தில் அவரிடம் இருந்த பொருட்கள் யாவும் நிறைவுற்றதும் தான் குடியிருந்த வீட்டையும் விற்று அதில் இருந்து வந்த பொருட்களையும், செல்வத்தையும் கொண்டு எம்பெருமானுக்கு தீபம் ஏற்றி மனம் மகிழ்ந்து கொண்டிருந்தார்.
தன் வீட்டை விற்றதால் கிடைத்த பொருட்களும், செல்வங்களும் சில நாட்களில் தீர்ந்துவிடவே இனி என்ன செய்வது என்று யோசித்தவர் மற்றவர்களிடம் சென்று, தான் செய்யும் அறச்செயலை உரைத்து யாசித்தலுக்கு அஞ்சினார். பின்பு தன்னுடைய உடல் உழைப்பினால் எம்பெருமானுக்கு தீபமேற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டு அதற்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். கணம்புட்களை வெட்டிக் கொண்டு வந்து அதை விலைக்கு விற்று அதிலிருந்து கிடைத்த செல்வத்தைக் கொண்டு எம்பெருமானுக்கு தீபம் ஏற்றுவதற்கான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி அதில் தீபம் ஏற்றி எம்பெருமானுக்கு செய்யும் திருப்பணியை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செய்து கொண்டே இருந்தார்.
எம்பெருமான் தன்னுடைய அடியாரின் பக்தியையும், அவருடைய பெருமையை உலகறியச் செய்யவே திருவுள்ளம் கொண்டு அங்கு திருவிளையாடலையும் நிகழ்த்தத் துவங்கினார். அதாவது கணம்புட்களை வெட்டி வந்து அதை விலைக்கு விற்று கொண்டு இருந்தபோது அதை வாங்குவதற்கு ஆட்கள் யாருமில்லாமல் என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்தார் கணம்புல்ல நாயனார். ஏனெனில் தீபமேற்றுவதற்கு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது அல்லவா... அது இல்லாமலேயே தீபம் ஏற்றுவது எவ்விதம் என்று மனம் பதறினார்.
என்ன செய்வது என்று யோசித்தபோது அவருக்கு ஒரு வழியும் கிடைத்தது. அதாவது, தான் வெட்டிக் கொண்டு வந்திருந்த புட்களைக் வைத்து தீபமேற்ற தொடங்கினார். அந்நிலையிலும் தனது பணியானது எவ்வித இடர்பாடும் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டு அதையும் வெற்றிகரமாக எம்பெருமானின் அருளால் செய்து முடித்தார். நாட்கள் செல்ல செல்ல தனக்கு கிடைத்த புட்களின் அளவும் குறையத் துவங்கியது. பின்பு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நின்று கொண்டிருந்த கணம்புல்லர் தன்னிடம் இருக்கின்ற புட்களைக் கொண்டு விளக்கை ஏற்ற தொடங்கினார். ஒரு நிலையில் புட்கள் இல்லாத பொழுது தனது திருமுடியை மடுத்து எரிக்க துவங்கினார்.
அடியாரின் இச்செயலை கொண்டதும் மனம் நெகிழ்ந்த எம்பெருமான் அந்த இடத்தில் கணம்புல்லருக்கு சக்தி சமேதராய் ரிஷப வாகனத்தில் காட்சி அளிக்கத் தொடங்கினார். அடியார் நிலம் கிடந்து அடிபப்ணிந்து எம்பெருமானைப் போற்றினார். எம்பெருமான் கருணை உள்ளம் கொண்டு தனது அடியாரின் பக்தியினால் மெய்மறந்த எம்பெருமானும் பெரும் கருணை செய்து கணம்புல்லருக்கு சிவலோக பதவியை அளித்து அருள் புரிந்தார்.
சிவபுராணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக