ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவிற்கும், ஞானத்திற்கும் மற்றும் புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் 'வித்யாகாரகன்" எனப்படும் புதன் கிரகம்தான்.
இந்தப் பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டறியப் போகும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் புதன்தான். நவீன விஞ்ஞானிகளை உருவாக்குபவரும் இவர்தான்.
புதன் சமநிலைக் கிரகம். நல்லவனுடன் சேர்ந்தால் ஜாதகரின் புத்தி நல்லவிதமாக வேலை செய்யும். அதே புதன் தீயவனுடன் சேர்ந்தால் கெட்ட வழியில் வேலை செய்யும்.
லக்னத்தில் புதன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு நல்ல புத்தி இருக்கும்.
லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?
👉 சிந்தனை திறன் உடையவர்கள்.
👉 கல்வி வேள்விகளில் சிறந்தவராக இருப்பார்கள்.
👉 இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.
👉 கணிதத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
👉 ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்கள்.
👉 வியாபாரத்தில் புத்திக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.
👉 அழகிய தோற்றப்பொலிவு உடையவர்கள்.
👉 வாழ்க்கைத்துணைவரின் மீது அன்பு கொண்டவர்கள்.
👉 மன உறுதி உடையவர்கள்.
👉 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
👉 செல்வ சேர்க்கை உண்டாகும்.
👉 பொது விஷயங்களில் சிறந்த அறிவு கொண்டவர்கள்.
👉 தத்துவத்தில் ஈடுபாடு உடையவர்கள்.
👉 நடுத்தரமான உயரம் கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக