Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 026

சத்தி நாயனார் !!

சோழநாட்டில் வரிஞ்சையூர் பதியில் வேளாளர் குலத்தில் தோன்றிய சிவபக்தர்தான் சத்திய நாயனார். இவர் எம்பெருமானின் மீது அதிக பக்தி கொண்டு சிவத்தொண்டராக வாழ்ந்து வந்தார். இளமை முதலே சிவபெருமானின் மீது அளவற்ற பக்தியை கொண்டிருந்த சத்தியார் இளமையிலேயே சடைமுடியுடையவர்.

இளம் கன்று பயம் அறியாது என்பது போல் சிறு வயது முதலே பயம் என்பதை அறியாமல் வளர்ந்து வந்தார். சிவனின் மீது பற்றுக்கொண்டு சிவனடியார்களுக்கு தேவையான உதவிகளை செய்வதையே பெரும் பேறாக நினைத்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தார்.

சத்தியருக்கு சிவனையும், சிவனடியார்களையும் இகழ்ந்து பேசும் பேச்சைக் கேட்டால், அவ்வாறு பேசியவர்களைத் தண்டித்தல் வேண்டும் என்று எண்ணுவார். வாளா கேட்டிருத்தல் சிவ அபராதமாம். இங்ஙனம் சிவனடியார்களை இகழ்ந்து பேசியவர்களது நாவினை ஆண்மையுடன் அரித்தெறிந்து, அதனைத் தூய்மை செய்தல் அரிய வீரச் சிவப்பணியாக எண்ணினார்.

'தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்."
பாடல் விளக்கம் :

சிவனடியாரைத் தீங்கு கூறி இகழ்ந்த நன்மை இல்லாரின் நாவைத் துண்டித்ததற்கு ஏற்ப, வளைந்த 'தண்டாயம்" என்ற கருவிகொண்டு இழுத்து, அவ்விடத்தேயே கூர்மையான கத்தியால் அரிந்து, அன்பு பெருகும் சிறப்புடைய தொண்டில் உயர்ந்து விளங்கினார்.

அவர்கள் நாவினை அரியும் வலுவைக் கொண்டிருப்பதாலேயே அவர் சத்தியார் என்று அழைக்கப்பெற்றார். சிவனின் மீது கொண்டிருந்த அன்பினாலேயே இத்தகைய அன்பை செய்து வந்து சிவனின் அன்பை பெற்றார். சிவனடியார்களை யாரும் இகழா வண்ணம் முழுக்க முழுக்க சிவனுக்காகவே வாழ்ந்து வந்தார். அளவற்ற தொண்டாற்றி சிவனது பாதத்தில் சரணடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக