
கன்னியாகுமரி மாவட்டம், திருவரம்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறான். கேரளாவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிகிச்சைக்காக அந்த சிறுவன் கேரளாவுக்கு சென்றுவர அந்த மாநில அரசு E Pass வழங்கியுள்ளது.
இந்த நிலையில், குமரி மாவட்ட நிர்வாகம் E Pass வழங்காமல் உள்ளதால் சிறுவன் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்துவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சிறுவனை போன்றே, ஊரடங்கால் ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்துக்கு, மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சிகிச்சை பெற முடியாமல் வீட்டிலேயே ஏராளமான நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
இதுபோன்று திருவரம்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் முகேஷ் சிகிச்சைபெற கேரள அரசு E pass வழங்கிய நிலையில், அதனை காண்பித்த பிறகும் குமரி மாவட்ட நிர்வாகம் அச்சிறுவனின் பயணத்துக்கான E passஐ வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சிறுநீரகம் பாதிப்படைந்த சிறுவன், உரிய சிகிச்சை கிடைக்காததால் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக உறவினர்கள் புலம்பி வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம், குமரி மாவட்ட நோயாளிகளுக்கு தகுந்த உதவிகளை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக