Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மே, 2020

வைஷாலியின் பொய்!

ஒரு ஊரில் ஜானகி என்று ஒரு பெண் இருந்தார். அவருக்கு ரமேஷ், விக்கி, வினோத், வைஷாலி என்று நான்கு குழந்தைகள். ஒருமுறை ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று நினைத்தாள். பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. வைஷாலி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதே இல்லை. பழத்தைத் சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையால் ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது. உடனே ஜானகி, ஒரு ப்ளம்ஸ் பழத்தை யாராவது சாப்பிட்டீர்களா? என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள். எல்லோரும் இல்லை என்று சொன்னார்கள். வைஷாலியும் அவர்களோடு சேர்ந்து நான் சாப்பிடவில்லை என்று சொன்னாள்.

  சரி, யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும் என்றாள் ஜானகி. வைஷாலி பயந்துபோய், இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன் என்று கூறி அழத் தொடங்கினாள். பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது என்று தன் குழந்தை வைஷாலியை சமாதானப்படுத்தினாள் ஜானகி.

நீதி :

பொய் சொன்னால் ஒரு நாள் உண்மை தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக