நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30
மணி நேரம் இருந்த பெண்ணின் உயிரை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்
பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
கிருஷ்ணகிரி சேர்ந்தவர் மல்லிகா இவரை
கடந்த மே 25-ம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக 26ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு
அனுமதிக்கப்பட்டார் அங்கு இதய அறுவை சிகிச்சையின் அவசர நெஞ்சு அறுவை சிகிச்சை
செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதய அறுவை சிகிச்சைத்துறை
கொண்ட குழு பத்திரமாக அறுவை சிகிச்சை செய்து சுமார் 30 மணி நேரம் நெஞ்சு பகுதியில்
குத்தியிருந்த கத்தியை பாதுகாப்பாக அகற்றினர். இது குறித்து மருத்துவமனையில்
சொல்லும்போது இது ஒரு ஆச்சரியமான அதிர்ச்சியான நிகழ்வு. அந்த கத்தி பெண்ணின்
நெஞ்சுப் பகுதியில் இறங்கி இருந்தது.
ஒரு இன்ச் கைப்பிடி மட்டுமே வெளியே
தெரிந்த நிலையில் சிகிச்சை செய்ததில் கத்தி இறங்கியா பகுதியில் முக்கிய உறுப்புகள்
ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால் நுரையீரலில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டது ஆனால்
மற்ற உறுப்புகளுக்கு பாதிக்காத வகையில் அறுவை சிகிச்சை செய்து கத்தி பாதுகாப்பாக
அகற்றிய பின்பு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரிசெய்யப்பட்டது என்று மருத்துவர்
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக