Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

அடுத்து இந்த தமிழ் ஹீரோவுடன் கூட்டணி சேர தயாராகும் அட்லீ? அது விஜய் இல்லை

Atlee

அட்லீ அடுத்து ஒரு முன்னணி தமிழ் ஹீரோவுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு உதவியாளராக பணியாற்றி அதன்பின் இயக்குனராக களம் இறங்கியவர் அட்லி. அவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி மிகப் பெரிய ஹிட்டானது. அதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அட்லீக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யுடன் அவர் பணியாற்றினார். தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றன.

பிகில் படம் சென்ற வருடம் வெளியான நிலையில் அதற்கு பிறகு எந்த புது படத்தையும் அறிவிக்காமல் இருக்கிறார் அட்லி. தனது ஐந்தாவது படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக அப்போது கூறப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவராமல் இருக்கிறது.

அவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் கூட்டணி சேர்கிறார் என கூறப்பட்டாலும், அது இன்னும் துவங்கிய பாடில்லை. இந்நிலையில் தற்போது அட்லி ஜெயம் ரவியுடன் கூட்டணி சேருகிறார் என கோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது.

அட்லி இந்த படத்தை இயக்கப் போவது இல்லை, தயாரிக்க மட்டுமே செய்கிறார். அட்லியின் உதவியாளர் ஒருவர் தான் இந்த படத்தினை இயக்குகிறார். அதில் ஹீரோவாக ஜெயம் ரவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

தயாரிப்பாளராக அட்லிக்கு இது மூன்றாவது படம். ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார் அட்லீ. அதன் பிறகு அர்ஜுன் தாஸ் நடித்த அந்தகாரம் படத்தினை வெளியிட இருந்தார். ஆனால் அதன் ரிலீஸ் கொரோனா லாக் டவுன் காரணமாக பாதிக்கப்பட்டதால், அதை நேரடியாக ஒரு OTT தளத்தில் வெளியிட உள்ளார் என சில வாரங்கள் முன்பு செய்தி வெளியானது.

ஜெயம் ரவி தற்போது தமிழ் சினிமாவில் படு பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தனது 25வது படமான பூமி படத்தில் நடித்து முடித்துள்ளார். லக்ஷ்மன் இயக்கியுள்ள இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதன் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி மணிரத்னம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்திலும் ஒரு முக்கிய ரோலில் ஜெயம் ரவி நடிக்கிறார். அதற்காக பல்வேறு பயிற்சிகளை அவர் எடுத்துக் கொண்டார். அந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அதற்குப் பிறகு இந்திய வில் பல இடங்களில் சூட்டிங் நடந்தது. மேலும் பல இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் கொரோனா லாக் டவுன் என்பதால் சினிமா சூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காமல் உள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனாலும் மேலும் ஒரு சிக்கல் இருக்கிறது, இது வரலாற்று படம் என்பதால் அதில் பல காட்சிகளில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை கொண்டுதான் படமாக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அவ்வளவு கூட்டம் கொண்டு ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக