Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

அறிகுறி இல்லாத கொரோனாவை கண்டறியும் ஆக்சி பல்ஸ் மீட்டர், வீட்டிலேயே பயன்படுத்தலாம்!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கோவிட் 19 சீனாவை கடந்து உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இவை தீவிர பெருந்தொற்றாக மாறி போனதாலும் உரிய மருந்து கண்டறியாததாலும் உலக நாடுகள் பெருவாரியான மக்களை பலிகொடுக்க வேண்டியதாயிற்று.

ஆறுமாதங்கள் கடந்தும் இன்னும் இத்தொற்றின் வேகம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் வறட்டு இருமல், சளி, காய்ச்சல் போன்றவை மட்டுமே இதன் அறிகுறிகளாக அறியப்பட்டது. அதனால் இது குறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தியது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை. படிப்படியாக இதன் அறிகுறிகளாக உடல் வலி, உடல் சோர்வு, பலவீனம், வாசனை அறியும் திறன் இன்மை, நாவின் சுவையறியும் திறன் இன்மை என ஒவ்வொன்றாக கூறிவந்த நிலையில் தற்போது அறிகுறி இல்லாமல் கொரோனாவுக்கு பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது.

கொரோனா கோவிட்- 19 என்னும் பெருந்தொற்று எண்ணற்ற உயிர்களை வரிசையாக காவு வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அறிகுறி இல்லாமல் தீவிரமாகும் வரை இதை கண்டறியமுடியவில்லை என்னும் கவலை மக்களை ஆட்கொண்டுள்ளது.

கொரோனா எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் வரலாம் என்னும் சூழ்நிலையில் இருந்துவருகிறோம். அறிகுறி இல்லாவிட்டாலும் இறுதியில் இவை தாக்கும் இடம் உடலில் நுரையீரல் என்பது மட்டுமே உறுதியாகி உள்ளது. உள்ளங்கை, மூக்கின் துவாரம் அருகில், வாய் வழியாக, கண் வழியாக உள்ளே செல்லும் வைரஸ் கிருமியானது வயிற்றுக்குள் சென்றால் பாதிப்பில்லை. ஏனெனில் இவை வயிற்றில் இருக்கும் அமிலத்தாலும் அதிக வெப்பத்தாலும் அவை அழிந்துவிடக்கூடும்.

அதே நேரம் இவை சுவாசக்குழாய் வழியாக இவை நுரையீரலை அடைந்தால் அங்கேயே தங்கி பாதிப்பை உண்டாக்கிவிடும். அதனால் தான் வெளியிலிருந்து வந்ததும் கைகளை முகத்தில் தொடாமல் வாயகருகே கொண்டு செல்லாமல் கைகளை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அதே போன்று வாய் வழியாகவும் மூக்கு துவாரங்களிலும் காற்றில் வைரஸ் தொற்று பரவக்கூடாது என்று முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறார்கள்.

நுரையீரலில் தங்கும் நோய்க்கிருமி ஈரப்பசை மிகுந்திருக்கும் நுரையீரலில் தங்கிவிடுகிறது. நுரையீரலில் உள்ளே காற்று குழல்களை அடைத்து மூச்சுத்திணறலையும் இறுதியில் மரணத்தையும் உண்டாக்கிவிடுகிறது. பரிசோதனையின் மூலம் கண்டறியப்படும் கொரோனாவை உடலில் ஆக்சி அளவை அறிந்துகொள்ளும் பல்ஸ் ஆக்சி மீட்டரை கொண்டு அறிந்துகொள்ளமுடியும். தற்போது கொரோனா அறிகுறியால் தனிமை படுத்தி கொண்டவர்கள் வீட்டில் அவ்வபோது இதை பரிசோதித்து கொள்வதன் மூலம் தீவிர பாதிப்பு நேர்வதற்கு முன்பு மருத்துவரை அணுகலாம்.
ஆக்ஸி மீட்டர் என்பது உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிக்கப்படும் எளிமையான சாதனம். இவை விரல் முனையில் வைக்கும் போது வலியில்லாமல் ஆக்சிஜன் அளவை கண்டறிய இரண்டு அலைநீள ஒளியை விரல் வழியாக உடலுக்கு அனுப்புகிறது. பிறகு அவை இதயத்தில் இருந்து வரும் SPo2 ஆக்சிஜன் சதவீதத்தையும் இதயத்துடிப்பு Pulse வீதத்தையும் காண்பிக்கிறது.

ஆக்சி பல்ஸ் மீட்டர் வலியில்லாமல் பரிசோதனை செய்து கொள்ளமுடியும். இவை உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கணக்கிட உதவும் கருவி. இதை ஆன் செய்து கை பெருவிரல், கால் விரலில் வைத்தால் போதும். அவற்றின் அழுத்தத்தை நீங்கள் உணர்ந்தாலும் அவை வலியை உண்டாக்குவதில்லை.ஒரு விதமான அசெளகரியம் உணர்ந்தாலும் அவை தாங்ககூடியவையே.

ஒருபக்கம் SPo2 மறுபக்கம் Pulse தெரியும். அதில் SPo2 பக்கத்தில் 95 முதல் 98 வரை இருந்தால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்று உறுதியாக சொல்லிவிட முடியும். 95 ஆக இருந்தாலும் நீங்கள் மூச்சுபயிற்சி செய்வதும் இடையே 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மீண்டும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பரிசோதனை செய்வதும் அவசியம். 90 க்கு கீழ் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனெனில் கொரோனா தாக்குதலால் உடலில் ஆக்சிஜன் அளவு படிப்படியாக குறையத்தொடங்கும். உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதை இந்த பரிசோதனை கொண்டு தெரிந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் நீங்கள் கொரொனா பரிசோதனை செய்து கொள்ளலாம். அப்படியெனில் ஆக்சிஜன் குறைந்தாலே கொரோனா என்று நீங்கள் பயந்துவிட வேண்டாம். பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் வரும் முன் காக்கலாம்.

கொரோனாவால் தனிமைப்படுத்திகொண்டவர்கள் ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது இந்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்கப்படும். உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டியதில்லை. அதே நேரம் உடல் சோர்வு காய்ச்சல் இருப்பவர்கள் கொரோனா பெருந்தொற்று குறித்த இந்நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வது நிச்சயம் பாதுகாப்பாகவே இருக்கும். சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பரிசோதனை செய்து கொள்ளமுடியும்.

வீட்டிலேயெ எளிமையான முறையில் பரிசோதனை செய்துகொள்ள முடியும் இந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரின் விலையும் அதிகமில்லை 2000 ரூபாய்க்கே நல்ல மீட்டர் கிடைக்கும். துல்லியமான பரிசோதனை என்று சொல்லமுடியாவிட்டாலும் அதிக வேறுபாடு கிடையாது என்பதால் ஒவ்வொருவர் வீட்டிலும் இந்த நேரத்தில் இதை பயன்படுத்துவது நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கும். குறிப்பாக கொரோனாவால் தனிமைப்படுத்த பட்டு வீட்டிலிருப்பவர்களுக்கு இவை தேவை என்றும் கூட சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக