Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

நம்பமுடியாத மலிவு விலையில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?


மிரட்டலான டிசைனில் மலிவு விலை ஸ்மார்ட்போன்
லெனோவா நிறுவனத்திற்குச் சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை நம்பமுடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிரட்டலான அம்சங்களுடன் நம்பமுடியாத மலிவு விலையில் இந்த போனின் சிறப்பு என்னவென்று பார்க்கலாம்.
பாப்-அப் கேமராவுடன் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ்
மோட்டோரோலா நிறுவனத்தின் பட்டியலில் வெளியாகும் இரண்டாவதாக பாப்-அப் கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஆகும். மோட்டோரோலா நிறுவனத்தின் கீழ் பாப்-அப் கேமரா அமைப்புடன் முதல் முதலில் வெளிவந்த மோட்டோரோலா சாதனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஆகும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் குவாட் கேமரா அமைப்பையும் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது.
மிரட்டலான டிசைனில் மலிவு விலை ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5' இன்ச் 1080 x 2340 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் நாட்ச் இல்லாத முழு டிஸ்பிளே யுடன் பாப் அப் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. சிறந்த பாதுகாப்பு வசதியுடன் மிரட்டலான டிசைனில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு நாளை இந்தியச் சந்தையில் கால்பதிக்கத் தயாராகவுள்ளது.
1TB வரையிலான கூடுதல் மெமரி
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் உடன், அட்ரினோ 618 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் 1TB வரையிலான கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டகாசமான குவாட் கேமரா அமைப்பு
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்ஸ்ல கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லெனஸ் கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களை எல்இடி ஃபிளாஷ் உடன் கொண்டுள்ளது. சிறப்பினை செல்ஃபீ அனுபவத்திற்கு 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த 5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன், 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் மிக பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன், புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டி, என பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் விலை மற்றும் விற்பனை தேதி
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனின், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் ரூ.16,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் என இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 24 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக