கேரள மாநிலம், ராஜக்கோட் பகுதியில் வசித்து வருபவர் ராஜாம்மா. ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வரும் இவரது வீட்டில் இரண்டு மின் விளக்குகள், ஒரு டிவி மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இதற்காக அவர், 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்துவது வழக்கமாம். இந்த நிலையில், இந்த மாதத்துக்கான மின் கட்டணமாக 11. 359 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து கேரள மாநில மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, " மின் இணைப்பில் உள்ள பிரச்னையால் ஏற்பட்ட மின் இழப்பின் காரணமாக மின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட தொழிலாளியின் குடியிருப்புக்கு அருகில் உள்ள வீடுகளிலும் இதே மாதிரியான புகார்கள் வந்துள்ளன. மீட்டர் பாக்ஸ், ரீடிங் அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் திடீரென மின் கட்டணம் அதிகமாகியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு பிரச்னையால், ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணம் அளவீடு செய்யாததால் இந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்படுகிறது.
தற்போது அதிகப்படியாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டால், கூடுதலாக பெறப்பட்ட கட்டணம் அடுத்தடுத்த மாதங்களில் வரும் மின் பயன்பாட்டுத் தொகையில் சரி செய்யப்படும்" என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக