குழந்தை பிறந்ததும் குழந்தையின் மூக்கு சப்பையாக இருக்கும். அதனால் தினமும் காலையில் குழந்தையின் மூக்கை இருபுறமும் இலேசாக அழுத்தி கூர்மையாக அழுத்துவார்கள். அதே போன்று தலையையும் பொறுமையாக உள்ளங்கைக்குள் உருண்டையாக அழுத்தி பிடிப்பார்கள். தற்போது பல தாய்மார்களுக்கு இது குறித்து தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
பிரசவத்தின் போது குழந்தை சிரமப்பட்டு வெளியே வந்தால் அதனுடைய தலையின் வடிவம் சீரற்று இருக்கும். பெரும்பாலான குழந்தைகளின் தலைபகுதி கூர்மையாக நீண்டு இருக்கும். மேலும் குழந்தையின் தலைபகுதி மிருதுவாக இருக்ககூடும்.
குழந்தையின் தலை உருண்டையாக இருந்தாலும் கூட சமயங்களில் குழந்தையை படுக்க வைக்கும் முறையிலும், குழந்தையின் தலை மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. பின்பகுதியில் அதிக அழுத்தம் கொடுத்து குழந்தை படுத்திருப்பதால் குழந்தையின் தலை தட்டையாக மாறிவிட வாய்ப்புண்டு. குழந்தையின் தலை வடிவம் மாறுவதற்கு இவை எல்லாமே காரணமாக இருந்தாலும் கூட உரிய முறையில் குழந்தைக்கு பராமரிப்பு மேற்கொண்டால் குழந்தையின் தலை வடிவத்தை உருட்டையாக மாற்றிவிட முடியும்.
குழந்தையின் தலை தட்டையாவதால் குழந்தை வளரும் போது அவை குழந்தையின் மூளைப்பகுதியையோ குழந்தையின் சீரான வளர்ச்சியையோ பாதிக்காது. ஆனால் தலை வடிவம் சீரற்று இருப்பது அழகு சார்ந்த பிரச்சனையை உண்டாக்கும். எளிமையான பயிற்சியின் மூலம் குழந்தையின் தலையை உருண்டையாக மாற்றிவிட முடியும். பாதிப்பில்லாமல். என்ன செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
குழந்தை பிறந்த முதல் ஒரு வாரங்களிலேயே ஓரளவு குழந்தையின் தலையை உருண்டையாக்கி வைக்க முடியும். குழந்தையின் பின்னந்தலை தான் தட்டைபகுதியை கொண்டிருக்கும் என்பதால் குழந்தையின் தலையை வெறுமனே துணியில் கிடத்தாமல் மெல்லிய துணிகளை இரண்டாக மடித்து தலையணையாக வைக்கவும். அதே போன்று தலையின் இரண்டு பக்கவாட்டிலும் இதே போன்று மெல்லிய துணியை மடித்து வைக்க வேண்டும். அதே நேரம் துணி வைப்பதால் குழந்தையின் தலை பக்கவாட்டில் திரும்பாமல் இருக்கும்படியும் செய்துவிட கூடாது.
ஒரே நிலையில் குழந்தையின் தலை இப்படியே இல்லாமால் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தலைபகுதியை மாற்றி மாற்றி வையுங்கள். இரவு நேரங்களிலும் இதே போன்று குழந்தையின் தலையை திருப்பி வையுங்கள். இதனால் தலைப்பகுதி இருபுறமும் திரும்புவதால் வடிவம் உருண்டையாக பெறமுடியும் .
குழந்தை தூங்கும் போது தலையை திருப்பமுடியாமல் ஒரே மாதிரி வைக்காமல் திரும்பும்படி சற்று இலகுவாக படுக்க வையுங்கள். சிலர் குழந்தை நகராமல் இருக்க வேண்டும் என்று குழந்தையின் பக்கத்தில் இருபுறமும் தலையணையை வைத்து விடுவார்கள் இதனால் குழந்தை அசெளகரியாமான உணர்வையே சந்திக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையின் தலையை உள்ளங்கையில் வைத்து கொடுக்க வேண்டும். ஒரே பக்கமாக தாய்ப்பால் கொடுக்காமல் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தலைப்பகுதியில் அழுத்தம் குறையும். தாய்ப்பால் கொடுத்தவுடன் அல்லது நீண்ட நேரம் குழந்தையை படுக்கையில் கிடத்தாமல் அவ்வபோது குழந்தையை தோளில் போட்டு தட்டி விட வேண்டும். இதனால் செரிமானம் சீராகும். தலையை உள்ளங்கையில் பிடித்திருப்பதால் குழந்தையின் தலைக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும். தொடர்ந்து மூன்று மாதங்களாவது இப்படி செய்வதன் மூலம் குழந்தையின் தலை மிருதுவாக மாறும்.
இதையெல்லாம் செய்தும் குழந்தையின் தலை வடிவத்தில் உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருந்தால் இந்த பயிற்சியின் மூலம் அவை சரிஆகும். குழந்தையை கீழே கிடத்தாமல் தொட்டில், கட்டில் போன்றவற்றையும் தவிர்த்து தூளியில் போட்டு விடும் போது குழந்தையின் தலை அழகான உருண்டை வடிவத்தில் பெறமுடியும். மேற்கண்டவை எல்லாமே வீட்டில் பெரியவர்கள் செய்வது தான். தற்போதைய சூழலில் இளந்தாய்மார்கள் குழந்தை வளர்ப்பில் நிச்சயம் இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக