ஒரு
கிராம் தங்கம் விலை சுமாராகா 4,900 ரூபாய்க்கு மேல் விற்றுக் கொண்டு இருக்கிறது.
தங்கத்தை
வாங்குவது எல்லாம் சாதாரண மக்களுக்கு ஒரு பெரிய கனவு போல் இருக்கிறது. அந்த
அளவுக்கு தஙக்த்தை விலை சர்வதேச அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட
நேரத்தில், நம்மை எல்லாம் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் ஒரு செய்தி
ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்திருக்கிறது.
பொதுவாக
ரயிலில் நாம் எதை எல்லாம் தவற விடுவோம்...? அதிகபட்சமாக பணம் வைத்திருக்கும் பர்ஸை
தவற விடுவது, மொபைல் போனைத் தவறவிடுவோம். ஹெட் செட் போன்ற மற்ற சில்லறை
பொருட்களைத் தவற விடுவோம். ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒரு நபர் சுமாராக 3 கிலோ
தங்கத்தை ரயிலில் விட்டுச் சென்று இருக்கிறார்.
விட்டுச் சென்ற
விவரம்
அந்த மர்ம நபர், கடந்த அக்டோபர்
2019-ல், 3 கிலோ தங்கத்தை செயிண்ட் கேலன் (St Gellen) மற்றும் லுகர்ன் (Lucerne)
நகரங்களுக்கு இடையிலான ரயிலில் விட்டுச் சென்று இருக்கிறார். விட்டுச் சென்ற 3
கிலோ தங்கத்தை ஸ்விட்சர்லாந்து அரசு அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
தங்கத்தின்
மதிப்பு
மர்ம நபர் தவற விட்ட 3 கிலோ
தங்கத்தின் மதிப்பு சுமாராக 1,91,000 அமெரிக்க டாலராம். இந்திய ரூபாய் மதிப்பில்
சுமாராக 1,43,00,000 ரூபாயாம். இத்தனை நாட்களாக, தங்கத்தின் சொந்தக்காரரை தேடி
அலைந்து இருக்கிறது ஸ்விட்சர்லாந்து அரசு துறை. ஆள் கிடைக்கவில்லை.
முயற்சி பலன்
இல்லை
தங்கத்தின் சொந்தக்காரரைக் கண்டு
பிடிக்க முடியாததால், தற்போது இந்த செய்தியை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறது
ஸ்விட்சர்லாந்து அரசுதரப்பு. தற்போது அந்த 3 கிலோ தங்கம் லுகர்ன் (Lucerne) அரசு
வழக்கறிஞர் அலுவலகத்தில் இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
5 வருடம்
தங்கத்தின் சொந்தக்காரர், அந்த 3 கிலோ
தங்கத்தை தன்னுடையது தான் என நிரூபித்து பெற்றுக் கொள்ள ஐந்து வருடங்கள் கால
அவகாசம் இருக்கிறதாம். ஒருவர் அந்த 3 கிலோ தங்கத்தை, தனக்கு சொந்தம் என உரிமை
கோரினால், அதை எப்படி அரசு தரப்பில் சரி பார்ப்பார்ப்பார்கள் என்கிற விவரங்களைச்
சொல்லவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக