>>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 22 ஜூன், 2020

    7-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    நவகிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானச புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன் ஆவார். எனவேதான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு 'கவி" என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழிலில் வளமையை ஏற்படுத்துபவரும் சுக்கிரனே. மேலும் சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றி கிடைக்கும்.

    அறுபத்தி நான்கு கலைகளுக்கு அதிபதியாகவும், வாகனங்களுக்கு அதிபதியாகவும், காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதியாகவும் சுக்கிரன் திகழ்கிறார். ஜோதிடப்படி களத்திரக்காரகன் என்று சுக்கிரனை அழைப்பார்கள்.

    லக்னத்திற்கு 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

    7-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

    👉 எதிர்பார்த்த மண வாழ்க்கை அமையும்.

    👉 மனைவியின் மூலம் வசதி வாய்ப்புகள் ஏற்படும்.

    👉 பல திறமைகளை கொண்டவர்கள்.

    👉 கவிதைகளில் ஆர்வம் உடையவர்கள்.

    👉 உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்கள்.

    👉 நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்கள்.

    👉 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

    👉 புதிய நபர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

    👉 விரும்பிய அழகிய தோற்றம் கொண்ட களத்திரம் அமையும்.

    👉 சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள்.

    👉 ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள்.

    👉 தன்னுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக