இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட்டில்
பிளிப்கார்ட் தின விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பொருட்களுக்கு
சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி
கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் சிறு
நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றன.
ஊரடங்கு தளர்வில் பல்வேறு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இகாமர்ஸ் வலைத்தளங்களில் மொபைல் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை
தொடங்கியுள்ளது.
இகாமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட்
இகாமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட்
விற்பனையை தொடங்கியது. அதுமட்டுமின்றி பிளிப்கார்ட் தின விற்பனையை தொடங்கியது.
இந்த விற்பனை நேரலையானது ஜூன் 3 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
விற்பனையில் மடிக்கணினிகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற கேஜெட் பொருட்களுக்கும்
பல சலுகையோடு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு
சலுகைகள்
தள்ளுபடி மட்டுமின்றி
பிளிப்கார்ட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை கட்டணமில்லா இஎம்ஐ
உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கிறது. அதோடு ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு
மூலம் பொருட்கள் வாங்கும் பயனர்களுக்கு 10% வரை தள்ளுபடி வழங்க ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்
பொருட்களுக்கு 80% தள்ளுபடி
ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்
பொருட்களுக்கு 80% தள்ளுபடி வழங்கப்படும் என நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% மேல் சலுகைகள் சோனி, ஜேபிஎல் உள்ளிட்ட பிராண்ட்
ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு
மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியுடன் 75 சதவீதம் வரை
தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரூ.1,499-ல் இருந்து தொடங்கும்
சவுண்ட்பார்கள்
வெறும் 1,499 ரூபாயிலிருந்து
தொடங்கும் சவுண்ட்பார்களின் வரம்பில் 40 சதவீதம் வரை தள்ளுபடி இருக்கும். ஹெச்பி,
லெனோவா, டெல் மற்றும் ஆசஸ் போன்ற பிராண்டுகளின் மடிக்கணினிகளில் 50 சதவீதம் வரை
தள்ளுபடி இருக்கும். கேமிங் மடிக்கணினிகளிலும் தள்ளுபடிகள் இருக்கும்.
பிளிப்கார்ட் தின விற்பனை
பிளிப்கார்ட் தின விற்பனையில் மொபைல்
போன் பாகங்கள், கவர்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. மேலும்
நோ- காஸ்ட் இஎம்ஐ, நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்டவைகளும் கிடைக்கிறது.
குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சியோமி, மோட்டோரோலா, ரெட்மி, போகோ உள்ளிட்ட
நிறுவனங்களின் பட்ஜெட் மாடல் மொபைல்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
மிக்ஸி, வாஷிங் மெஷின், ரெப்ரிஜிட்டர்
மிக்ஸி, வாஷிங் மெஷின், ரெப்ரிஜிட்டர்
போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி
கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக