ஆஜராக இயக்குனர் பாபு யோகேஸ்வரன்
மற்றும் தாயார் தயாரிப்பாளர் இளங்கோவனுக்கு சம்மன்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான
ஜீ5என்கிற ஓடிடி தளத்தில் வரப்போகும் தொடர் காட்மென், இந்த தொடரின்
டிரெய்லரை பார்த்து பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது என்பது அனைவரும் அறிந்த
ஒன்றே. இந்த தொடர் வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என கூறப்பட்ட நிலையில்,
தற்பொழுது இந்த வெப் சீரிஸ் தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக விமர்சித்ததாக
கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிராமணர்
சமூகத்திற்கு எதிரான வசனங்கள் இருந்ததால் காட்மென் வெப்சீரிஸ் வெளியிடப் படவில்லை,
சர்ச்சைக்குள்ளான இந்த தொடர் இயக்குனர் பாபு யோகேஷ் தயாரிப்பாளர் இளங்கோ மீது
போலீசார் வழக்கு.
இந்த நிலையில் சாமியார் வேடமிட்ட
ஒருவர் பிராமணர்களை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி நடித்திருக்கிறார். மேலும்
பாஜக இந்து அமைப்புகளின் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார்
வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர், நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக
இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் இளங்கோவனுக்கு சம்மன்
அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக