Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூன், 2020

மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே!


இந்தியாவின் 3-வது பெரிய பிராட்பேண்ட் நிறுவனம்
ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்கச் செய்யப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆக்ட் ஃபைபர்நெட் ஜூன் 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரப் போவதாகவும் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் 3-வது பெரிய பிராட்பேண்ட் நிறுவனம்
இந்தியாவின் 3-வது பெரிய பிராட்பேண்ட் நிறுவனமான ஆக்ட் ஃபைபர்நெட் மொத்தம் 19 நகரங்களில் அதன் சேவையை வழங்கி வருகிறது. இதில் மொத்தம் 8 நகரங்களுக்கு மட்டுமே இந்த உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தையும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
விலையை உயர்த்திய எட்டு நகரங்கள்
ஆக்ட் ஃபைபர்நெட் பிராட்பேண்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய எட்டு நகரங்களானது பெங்களூரு, சென்னை, கோவை, ஹைதராபாத், டெல்லி, விஜயவாடா, விசாக், மற்றும் குண்டூர் ஆகியவை ஆகும். இந்த விலை உயர்வானது கேஜெட்360 அறிக்கையின்படி இந்த விலை உயர்வானது இரண்டு முதல் நான்கு சதவீதமும் சில பகுதிகளில் அதிக சதவீதத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆக்ட் ஃபைபர்நெட் வாடிக்கையாளர்களுக்கு
ஆக்ட் ஃபைபர்நெட் வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வானது ஆரம்ப கட்ட திட்டங்களில் இருந்தே தொடங்கப்படுகிறது. சென்னை குறித்து பார்க்கையில் இந்த திட்டத்தின் விலையானது ரூ.21-ல் இருந்து ரூ.26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சில்வர் ப்ரோமோ திட்டம்
ACT Basic, ACT Blaze, ACT Blast Promo, ACT Storm மற்றும் ACT Lightning ஆகிய திட்டங்களில் விலை உயர்வை சந்தித்துள்ளது. டெல்லியில் சில்வர் ப்ரோமோ திட்டத்தில் ரூ.50 விலை உயர்வுக்கு பிறகு ரூ.749 விலையில் இருந்து ரூ.799 ஆக அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆக்ட் பைபர் நெட் விலை உயர்வு
ஆக்ட் பைபர் நெட் விலை உயர்வு குறித்து நிறுவனம் அறிவித்துள்ள மின்னஞ்சல் குறித்து பார்க்கையில், கடந்த சில ஆண்டுகளாக விலை அதிகரிப்பு சிறந்த இணைய சேவைக்கான முதலீடு உள்ளிட்டவைகள் இருந்த போதிலும் விலை நிர்ணயம் தொடர்ச்சியாகவே இருந்தது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களை நிறுவனம் எதிர்கொண்டது. இது செலவு அதிகரிப்புக்கு வழிவகை செய்யும் விதமாக இருந்தது என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இணைய தேவை அதிகரிப்பு
கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதில் சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதோடு, பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழிர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் ஆக்ட் பைபர் அறிக்கையின்படி மார்ச் மாதத்தில் இணைய டிராபிக் அதிகரித்து இருப்பதாகவும், தொடர்ந்து அதிக அளவு ஸ்டிரீமிங் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபரின் பதிவிறக்கங்களும், பதிவேற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் இணைய டிராஃபிக்
சராசரி பதிவிறக்கங்கள் ஒரு பயனருக்கு மாதத்திற்கு 66% அதிகரித்தாலும், சராசரி பதிவேற்றங்கள் ஒரு பயனருக்கு மாதத்திற்கு 37% ஆக மட்டுமே உயர்ந்துள்ளன. வார நாட்களில் ஒட்டுமொத்த போக்குவரத்து அதிகரிப்பு 73% மற்றும் வார இறுதி நாட்களில் 65% அதிகரிப்பு உள்ளது. அதேபோல் வார நாட்களைவிட வார இறுதி நாட்களில் இணைய டிராஃபிக் அதிகமாக உள்ளது.
டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்தில் ரீசார்ஜ் திட்டம்
டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்தில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஆக்ட் ஃபைபர்நெட் திட்டங்கள் ரூ.100 என்கிற விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆக்ட் பைபர்நெட் விலை உயர்வு குறித்து பார்க்கையில் ஆக்ட் ஸ்விஃப்ட் திட்டம் இப்போது ரூ 710-ல் இருந்து தொடங்கி ஆக்ட் லைட்டினிங் விலை ரூ.1425 க்கு கிடைக்கிறது. அதேபோல் பெங்களூருவை பொருத்தவரை ACT Incredible, ACT Essential, ACT Advance, ACT Progress மற்றும் ACT Giga ஆகிய திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக