ஒரு ஊரில் யாரும் வசிக்காத ஒரு வீட்டில் நிறைய எலிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் ஒரு பூனை அந்த வீட்டிற்கு வந்தது.
அங்கு நிறைய எலிகள் இருப்பதைக் கண்டு பூனை மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அந்த பூனை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எலியாகப் பிடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அந்த பூனையைப் பார்த்து அந்த வீட்டில் இருந்த எலிகள் மிகவும் பயந்து நடுங்கின.
ஒரு நாள் எலிகள் எல்லாம் ஒன்று கூடி பூனையிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசனை செய்தன. அதில் ஒரு எலி, ஒரு மணியை பூனையின் கழுத்தில் கட்டினால், அது நடந்து வரும் போது டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்கும்.
மணி சத்தம் கேட்டவுடன் நாம் ஓடி ஒளித்து விடலாம் என்று கூறியது. இதைக் கேட்டதும் எலிகள் எல்லாம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன. அப்போது ஒரு எலி, இந்த மணியை யார் பூனையின் கழுத்தில் கட்டுவது என்று கேட்டது.
பூனையின் கழுத்தில் யாரால் மணியைக் கட்டமுடியும் என்று எலிகள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, மியாவ் மியாவ் மியாவ் என்ற பூனையின் சத்தம் கேட்டவுடன் எலிகள் பயந்து ஓடி ஒளித்துக்கொண்டன.
நீதி :
முடியாத யோசனையால் எந்தப் பயனும் இல்லை.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக