நமது உடலுக்கு உடனடியாக ஆற்றலையும், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டையும், வலிமையையும் அதிகரிக்கும் தன்மைக் கொண்டது திராட்சை. நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வரும் புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். திராட்சை புதினா இந்த இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து அருந்துங்கள்.
எப்படிச் செய்வது?
இரண்டு கப் விதை நீக்கிய திராட்சையுடன், உங்கள் விருப்பத்துக்கேற்ப ஆரஞ்சுச் சுளை, சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டவும். பத்து புதினா இலைகளைக் கிள்ளிப் போட்டு பரிமாறவும்.
சிறப்பு
ஆரஞ்சு, திராட்சை குளிர்ச்சியானது என்றாலும் புதினா அதற்கு நேர்மாறான தன்மை கொண்டது. எனவே, இரண்டையும் ஒரு சேர சாப்பிடுவதால் கோடையில் ஏற்படும் உடல் பாதிப்புகள் நீங்கும். இந்தக் கோடையில், உங்களின் உடலும் மனதும் உற்சாகத்தில் துள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக