இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.
மேலும், உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலும் தனது ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு விற்பனையை துவங்கவும் முடிவு செய்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வலுவான சந்தை இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், இந்த நாடுகளில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக இருப்பதால் அங்குள்ள மக்கள் மின்சார வாகனங்களை எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஏத்தர் எனெர்ஜி திட்டமிட்டுள்ளது. மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறப்பான வரவேற்பு இருப்பதால் அங்கும் வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளது.
மேலும், தனது ஸ்கூட்டர்களை அங்கேயே உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வகையில், அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் அமைப்பதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, அந்தந்த நாடுகளின் தேவையை மிக எளிதாகவும், விரைவாகவும் பூர்த்தி செய்ய முடியும். விலையையும் சரியாக நிர்ணயிக்க இயலும்.
ஏத்தர் நிறுவனம் தற்போது ஏத்தர் 450 என்ற மாடலை விற்பனையில் வைத்துள்ளது. கவரும் டிசைன், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் அதி செயல்திறன் மிக்க இந்த ஸ்கூட்டர் மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட 450எக்ஸ் மாடல் கடந்த ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது நினைவிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக