Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூன், 2020

கொக்குக்கு எத்தனை கால்கள்?

ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும், அவருக்குத் துணையாக ஒரு சமையல்காரரும் இருந்தனர். ஒரு நாள் வீட்டுக்காரர் கொக்கு ஒன்றை வாங்கிவந்து சமையல்காரரிடம் கொடுத்து கொக்கு குழம்பு வைக்கும்படி கூறினார். 

சமையல்காரர் குழம்பு வைத்ததும், குழம்பையும் சிறு அளவு கறியையும் சுவைப் பார்க்கலாம் என்று கால் துண்டு ஒன்றை முழுவதும் சாப்பிட்டு விட்டார். பின்பு வீட்டு உரிமையாளருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டதும், வீட்டுக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். 

சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த கொக்கின் கால் ஒரு துண்டை முதலில் எடுத்து வைத்தார். கொக்கின் மற்றொரு கால் துண்டையும் வை என்றார் முதலாளி.

கொக்கிற்கு ஒரு கால்தாங்க முதலாளி என்றார் சமையல்காரர். கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே? என்றார் முதலாளி. இல்லைங்க ஒரு கால்தாங்க என்றார் சமையல்காரர். 

முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை வயல்வெளிக்கு கொக்கினைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றார். வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக்கொண்டு ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த சமையல்காரர் பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக் கால்தான் என்று முதலாளியிடம் காட்டினார்.

உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும் தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு தனது இரு கால்களையும் மடக்கி கொண்டு பறக்க ஆரம்பித்தது. 

பார், கொக்கிற்கு இரு கால்கள் என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி. நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால் கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே என்றாராம் சமையல்காரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக