Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 11 ஜூன், 2020

லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ஒன்பது கிரகங்களிலும் மிக தனித்தன்மை வாய்ந்தவர் சுக்கிரன். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுக்கிரனுக்கு உண்டு.

நம் வாழ்வின் சந்தோஷ தருணங்கள் எதுவென்றாலும் அதில் முதன்மையாய் நிற்பது சுக்கிரன்தான். சுக்கிரன் இல்லாமல் சந்தோஷம் என்பது ஒருவருக்கு கனவிலும் கிடையாது.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் 6, 8, 12 மற்றும் நீச நிலை அடைந்திருந்தாலும், சந்தோஷம் சிறிதளவு இருந்தாலும் அதற்கு சுக்கிரனின் அருள்கொடைதான் காரணம்.

ஒரு மனிதனுக்கு பணம், பொருள், பதவி, உணவு, உறைவிடம் உள்ளிட்டவை இருந்தாலும், இல்லாவிட்டாலும், வம்ச விருத்திக்கு அதிபதி சுக்கிரன்தான். இதனால்தான் இவரை 'களத்திரகாரகன்" என்று அழைக்கின்றனர்.

லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

👉 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

👉 சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள்.

👉 வாகனச் சேர்க்கை உண்டாகும்.

👉 வசதி வாய்ப்பு உடையவர்கள்.

👉 அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள்.

👉 வாசனை திரவியங்களை பயன்படுத்தக்கூடியவர்கள்.

👉 வலுவான உடல்வாகு உடையவர்கள்.

👉 பேராசை உடையவர்கள்.

👉 ஆடம்பர வாழ்க்கையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

👉 வசீகரிக்கும் சக்தி கொண்டவர்கள்.

👉 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

👉 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

👉 செய்யும் முயற்சியில் காரிய சித்தி உடையவர்கள்.

👉 பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

👉 மனதில் போராட்ட குணமும், தைரியமும் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக