சாம்சங் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியை வாங்கினால் இரண்டு சாம்சங் கேலக்ஸி மாடல் ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. என்ன டிவி மாடல்கள், எந்த ஸ்மார்ட்போன் இலவசம், இதோ முழு விவரங்கள்.
வெளியான புதிய QLED 8K டிவிகளானது மிகவும் தீவிரமான மெல்லிய வடிவமைப்பு, பெயரில் குறிப்பிடுவது போல 8K படத் தரம் மற்றும் சரவுண்ட்-சவுண்ட் ஆடியோ ஆகியவற்றை இணைக்கும் தொழில்துறையின் முதல் 8K டிவி என்று கூறப்படுகிறது.
இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, இந்த டிவி தொடர் மீதான முன்பதிவுகளுக்கு சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்போனின் இரண்டு யூனிட்டுகள் முற்றிலும் இலவசமாககிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர புதிய 2020 க்யூஎல்இடி 8கே சீரிஸின் மீது ரூ.15,000 கேஷ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சாம்சங் நிறுவனமா அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக வெளியிட்டது.
இந்த தொடரின் கீழ் உள்ள 65 இன்ச் அளவிலான டிஸ்பிளே சைஸ் கொண்ட அடிப்படை மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ .4.99 லட்சம் ஆகும். இதன் 85 இன்ச் (2 மீ 16 செ.மீ) பதிப்பின் விலை ரூ.15.79 லட்சம் வரை செல்கிறது.
ஜூலை 1 முதல் ஜூலை 10, 2020 வரை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த புதிய 8கே டிவிகளின் முன்பதிவுகள் திறக்கப்பட்டு இருக்கும். தவிர இது ஏற்கனவே அனைத்து சாம்சங் ஸ்மார்ட் பிளாசாக்களிலும், முன்னணி நுகர்வோர் மின்னணு கடைகளிலும் மற்றும் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது.
சாம்சங் 2020 க்யூஎல்இடி 8கே சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளின் பிரதான அம்சங்கள்:
- இன்பினிட்டி டிஸ்பிளே
- கிட்டத்தட்ட 99% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
- அடாப்டிவ் பிக்சர
- ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிபையர்
- Q சிம்பொனி மற்றும் ஆப்ஜெக்ட் ட்ராக்கிங் சவுண்ட் பிளஸ்
- ரியல் 8கே தீர்மானம்
- 8 கே ஏஐ அப்ஸ்கேலிங்
- குவாண்டம் செயலி
- குவாண்டம் எச்டிஆர் மற்றும் பல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக