ஹானர் நிறுவனம் இன்று சீனாவில் தனது ஹானர் 30 லைட் (யூத் எடிஷனை) அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 30 லைட் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன், 6.5' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், இந்த ஸ்மார்ட்போன் MT6873 சிப்செட்டில் இயக்கப்படுகிறது, இது டைமன்சிட்டி 800 SoC ஆகும், இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 256 ஜிபி வரை மெமரி கார்டு அம்சத்துடன் வருகிறது.
ஹானர் 30 லைட் 5 ஜி
ஹானர் 30 லைட் 5 ஜி ஒரு டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போனாகும், இதில் 48 மெகாபிக்சல் கொண்ட ஒரு பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட 120° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேயில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.
22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு கைரேகை ரீடர் இடம்பெறுகிறது. இந்த போன் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதனத்தை 30 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்யலாம் மற்றும் 90 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
ஹானர் 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்கள்
இது மேஜிக் யுஐ 3.1.1 உடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வருகிறது. ஸ்மார்ட்போன் 160 x 75.32 x 8.35 மிமீ அளவிடும் மற்றும் அதன் எடை 192 கிராம் ஆகும். ஹானர் 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்களை பார்க்கையில் இது 5G (SA / NSA) / இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS / GLONASS / Beidou, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது.
விலை என்ன தெரியுமா?
64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 6 ஜிபி ரேமுக்கு 1699 யுவான் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 17,990 ஆகும். அதுபோல், இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 6 ஜிபி ரேம் மாடல் தோராயமாக ரூ. 20,105 ஆகும், இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 8 ஜிபி ரேம் தோராயமாக ரூ. 23,290 க்கு கிடைக்கும். ஹானர் 30 லைட் மிட்நைட் பிளாக், பாண்டம் சில்வர், சம்மர் ரெயின்போ மற்றும் க்ரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக