கடந்த ஜூன் 29ம் தேதியன்று தேச பாதுக்காப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் டிக் டாக் உள்பட 59 ஆப்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.
இந்த ஆப்கள் மூலம் பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு திருடப்படும் தகவல்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம்
இது ஒரு புறம் இப்படி இருந்தாலும், சீனாவின் மிக முக்கியமான வீடியோ செயலியான டிக்டாக் மூலம் பல ஆயிரம் பேர் தங்களது படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அதன் மூலம் அவர்களில் சிலர் மட்டுமே ஒரு வருமானத்தினையும் கண்டு வருகின்றனராம். இந்த நிலையில் இன்று வெளியான ஒரு அறிக்கையில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் 10,000 பேருக்கு மேல் சம்பாதித்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
டிக் டாக்கில் வருமானம்
ஆனால் அதே பிரிவில் டிக் டாக்கர்களின் எண்ணிக்கை வெறும் 100 தான் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். ஆனால் டிக் டாக்கில் மற்ற தளங்களோடு ஒப்பிடும்போது 10 மடங்கு பின் தொடர்பவர்களை காணலாம். இதே யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள சகாக்களையும் இதில் அடையாளம் காணலாம். ஆனால் டிக் டாக்கில் ஸ்பான்சர் செய்யும் வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் வெறும் 100 பயனர்களே என்று Greenroomம் துணைத் தலைவர் லட்சுமி பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இப்படியும் வருமானம்
ஆனால் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில், சில டிக் டாக் படைப்பாளிகள் ரசிகர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றும் அல்லது நிகழ்வுகளில் கலந்து கொள்ள (பணம் பெற்றுக் கொண்டு) அழைப்பிதழ் மூலம் அழைக்கப்படுகின்றனராம். இந்திய டிக் டாக் படைப்பாளிகள் கடந்த ஆண்டு மட்டுமே பிராண்டட் உள்ளடக்க இடத்திற்குள் நுழைந்தனர். ஆனால் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்துள்ளனர்.
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம்
இந்த தளங்களில் தொழில் நுட்பம், உணவு பேஷன், பயணம், அழகு, வாழ்க்கை உள்ளிட்ட துறைகளில் இந்த தளங்களில் படைப்பாளர்களாக உள்ளனர். ஆனால் டிக்டாக்கில் பெரும்பால பிராண்ட் வீடியோக்கள் பொழுதுபோக்கு, இசை, திரைப்பட ஸ்டுடியோக்கள், இசை லேபில்கள் உள்ளிட்டவை தான் அதிகம் விளம்பரபடுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.
இயல்பான வளர்ச்சி
யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமர்கள் இயல்பாகவே தங்கள் வளர்ச்சியினை வளர்த்துக் கொண்டுள்ளனர். ஆனாலும் சில தொழில் மதிப்பீடுகளின் படி, டிக் டாக் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் பல பில்லியன் டாலர்களை செலவழித்து இந்திய படைப்பாளர்களை கொண்டு வந்தது
வருமானம் எவ்வளவு?
பொதுவாக பொழுதுபோக்கு பிரிவில் குறைந்தது 10 மில்லியன் பின் தொடர்பவர்களைக் கொண்ட ஒரு டிக்டாக் படைப்பாளரின் வருமானம், ஒரு பிராண்டட் திட்டத்திற்கு சுமார் 3 - 4லட்சம் ஆகும். அதே இடத்தில் இன்ஸ்டாகிராமில் அதே இடத்தில் ஒரு உள்ளடக்கத்தை உருவாக்கிய ஒருவருக்கு 4 முதல் 5 லட்சம் வரையில் கிடைக்கும். யூடியூப்பில் அவர்களின் வருவாய் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் செல்லக்கூடும் என்று பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக