ஒன்பிளஸ் சீன நிறுவனமா? ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்
உண்மையில் எந்த நாட்டை சேர்ந்தது? இந்த பிராண்ட் எங்கு தோன்றியது? இதன் உரிமையாளர்
எந்த நாட்டை சேர்ந்தவர் என்று பல கேள்விகளைப் பலரும் கூகிள் சர்ச் தளத்தில் அதிகமாக
சர்ச் செய்துள்ளனர். இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில் இந்த பதிவில் விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சீன
ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அடுத்து தடையா?
இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான
எல்லை பதட்டங்களைத் தொடர்ந்து எல்ஏசி எல்லைகளில் உள்ள 20 வீரர்கள் சீன வீரர்களால் தாக்கப்பட்ட
பின்னர் சீன பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு துவங்கியது. இந்தியாவில்
உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட 106 சீன பயன்பாடுகளின் விரிவான பட்டியலுக்குப்
பிறகு, சீன ஸ்மார்ட்போன் சாதனங்கள் போன்ற ஹார்டுவேர் சாதனங்கள், கேஜெட் சாதனங்களை மத்திய
அரசு தடை செய்யப் போகிறதா என்று பலர் சந்தேகித்துள்ளனர்.
கூகிள்
சர்ச் டேப் இல் அதிகம் தேடப்பட்ட தகவல்
இதனால், எந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
சீனாவிலிருந்து உருவாகியுள்ளது, எந்த நிறுவனத்தின் சாதனங்கள் சீன நிறுவனத்தைச் சேர்ந்தது
என்பதைக் கண்டுபிடிக்க மக்கள் தொடர்ந்து கூகிள் சர்ச் டேப் இல் தங்களின் தேடல்களுக்கு
விடை தேடி சர்ச் செய்து வருகின்றனர். இதில் குறிப்பாகப் பலரின் தேடல் ஒன்பிளஸ் நிறுவனம்
எந்த நாட்டை சேர்ந்தது என்று தான் தேடப்பட்டுள்ளது. "ஒன்பிளஸ் சீன நிறுவனமா? என்று
வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ்
சீன நிறுவனமா?
இதனால், எந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
சீனாவிலிருந்து உருவாகியுள்ளது, எந்த நிறுவனத்தின் சாதனங்கள் சீன நிறுவனத்தைச் சேர்ந்தது
என்பதைக் கண்டுபிடிக்க மக்கள் தொடர்ந்து கூகிள் சர்ச் டேப் இல் தங்களின் தேடல்களுக்கு
விடை தேடி சர்ச் செய்து வருகின்றனர். இதில் குறிப்பாகப் பலரின் தேடல் ஒன்பிளஸ் நிறுவனம்
எந்த நாட்டை சேர்ந்தது என்று தான் தேடப்பட்டுள்ளது. "ஒன்பிளஸ் சீன நிறுவனமா?"
என்று வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
உங்களுக்குத்
தெரிய வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே
வலைத்தளத்தில் ஒன்பிளஸ் எந்த நாட்டைச் சேர்ந்த
நிறுவனம் என்பதை அறியப் பலரும் விரும்புகிறார்கள், மேலும் இந்த சாதனம் எப்போது வேண்டுமானாலும்
தடை செய்யப்படுமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கவும் முயன்று வருகின்றனர்.
இதைத் தான் நீங்களும் தெரிந்துகொள்ள நினைக்கிறீர்கள் என்றால், சரியான இடத்திற்குத்
தான் வந்துள்ளீர்கள். உங்களுக்குத் தெரிய வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் இந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் தான்
ஒன்பிளஸ்
நிறுவனம் சீன நிறுவனமா?
ஒன்பிளஸ் மொபைல் போன் நிறுவனம் முக்கிய
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும் பல அறிக்கைகளின்படி, இந்தியா
உட்பட உலகம் முழுவதும் 34 நாடுகளிலும் இந்நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 பிளஸ் போன்ற பல ஹிட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை, ஸ்மார்ட்போன்
உலகிற்குக் கொடுத்த இந்த பிரபலமான நிறுவனம் உண்மையில் சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனமாகும்.
தி ஒன் பிளஸ் டெக்னாலஜி கோ, லிமிடெட் குவாங்டாங்கின்
ஷென்சென் நகரைச் சேர்ந்த ஒரு உற்பத்தி நிறுவனம் ஆகும். தலைமை நிர்வாக அதிகாரியும் இணை
நிறுவனருமான பீட் லாவும் சீனாவில் வசிப்பவர். பல தகவல்களின்படி, ஒன்பிளஸின் முக்கிய
பங்குகள் பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானவை, இதுவும் சீனாவைத் தளமாகக்
கொண்டு இயங்கும் நிறுவனமாகும்.
'மேட்
இன் இந்தியா' பொருட்கள்
பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்பிளஸ்
உட்பட விபோ, ஓப்போ மற்றும் பல சிறந்த ஸ்மார்ட்போன் பிறாண்டுகளின் தாய் நிறுவனமாகச்
செயல்பட்டு வருகிறது. பல முன்னணி நிறுவனங்களின் பிராண்ட்களுக்கு பின்னணியில் பிபிகே
எலெக்ட்ரானிக்ஸ் உள்ளது என்பதே உண்மை. இருப்பினும், இந்தியத் துணைக் கண்டத்தில் விற்கப்படும்
ஸ்மார்ட்போன்களில் உள்ள பெரும்பாலான பொருட்கள் 'மேட் இன் இந்தியா' பொருட்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக