வடுகபட்டி என்ற ஊரில் சந்தோஷ என்ற இளைஞன் இருந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. பின் நகரத்தில் வேலையும் கிடைத்தது. தன் மனைவியுடன் நகரத்தில் தங்கி வேலை பார்த்தான்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தான். எல்லோரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை! என்று குறை சொன்னாள் மனைவி.
நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும் என்றான் அவன். அடுத்த நாள் அவன் வேலை முடித்து விட்டு வந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர் என்றாள் அவள்.
இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள், என்றாள். அச்சமயம் அவனுக்கு பெற்றோர்களிடம் இருந்து ஒரு மடல் வந்தது. அதில், ஒரு வாரம் நடக்கும் ஊர்த் திருவிழாவிற்க்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று எழுதி இருந்தது.
மனைவியிடம் அந்த மடலைக் காட்டி, எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை இருப்பதால் என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா! என்றான். அவளும் அவன் சொன்னதைக் கேட்டு ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள்.
பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா? என்று கேட்டான் அவன். அங்கே மாடு மேய்க்கும் வேலனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்! என்றாள் அவள்.
யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைத்துக்கொண்டு, அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் இருக்கிறது. இவளின் குணத்தை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தான் சந்தோஷ.
நீதி :
எப்போதும் நல்லதையே நினைத்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக